அனைவருக்குமான விரைவு CRM அணுகல், டெவலப்பர்களுக்கு புதிய டூல்கள்: Zoho அறிமுகம்!
ஜோஹோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை மென்பொருள் தயாரிப்புகளுக்கு இந்தியா 2வது பெரிய சந்தையாக விளங்குகிறது. 2023-ம் ஆண்டில் 33% வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். அக்டோபர் 2023-ல் Catalyst2.0 அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, புதிய திட்டங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படுவதன் மூலம், உலகளவி
சென்னையில் உள்ள சேவைகளுக்கான மென்பொருள் தயாரிப்பு (SaaS) யுனிகார்ன் Zoho Corp தனது ஜோஹோ வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை (Zoho CRM) அனைவருக்கும் விரைவில் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர் சேவையில் இயங்கும் அனைத்துக் குழுக்களும் பயனடையும் வகையில் இந்தத்துறையில் இதுவே முதல் முறை என்பதான அம்சங்களுடன் கூடிய CRM-ஐஅறிமுகம் செய்துள்ளது.
Zoho CRM என்பது CRM பயன்பாட்டிற்குள் தகவல்தொடர்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம் குழு ஒத்துழைப்பை ஒழுங்குபடுத்துகிறது.
ஜோஹோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை மென்பொருள் தயாரிப்புகளுக்கு இந்தியா 2வது பெரிய சந்தையாக விளங்குகிறது. 2023-ம் ஆண்டில் 33% வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். அக்டோபர் 2023ல் Catalyst2.0 அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, புதிய திட்டங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படுவதன் மூலம், உலகளவில் பயனர்களின் பதிவு எண்ணிக்கை 25% அதிகரித்துள்ளது.
கூடுதலாக, நிறுவனம் டெவலப்பர்கள் மற்றும் ஆப் டெவலப்மென்ட் டீம்களுக்கான அதன் பயன்பாட்டுச் சலுகைகளை மேம்படுத்தியுள்ளது, இதில் கேடலிஸ்டுக்குள் புதிய சேவைகளுக்கான ஆரம்ப அணுகல், சார்பு-குறியீடு, முழு-ஸ்டாக் டெவலப்மென்ட் பிளாட்பார்ம் மற்றும் நிறுவனத்தின் பகுப்பாய்வு தீர்வான Zoho Apptics பரவலாகக் கிடைக்கச் செய்தல் ஆகியவை அடங்கும்.
இது தொடர்பாக ஜோஹோ கார்ப்பரேஷனின் சி.இ.ஓ.வும் இணை நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு கூறும்போது,
“நிறுவனங்களும் வர்த்தகங்களும் மதிப்பை சிறப்பாக்குவதற்கும் சந்தைப் போட்டியில் தங்களுக்கான கூடுதல் சாதகத்தை அதிகரிக்கவும் புதிய சந்தை வாய்ப்புகளை நோக்கியும் கவனம் செலுத்தி வருகின்றன. ஆகவே அவர்களது வர்த்தகத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது ஜோஹோ," என்றார்.
அனைவருக்குமான ஜோஹோ வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை (CRM) என்பது முதன் முதலில் இந்தத் துறையில் ஜனநாயகமாக்கம் என்றே சொல்லலாம். வாடிக்கையாளர் செயல்பாடுகளில் இருக்கும் அனைத்துக் குழுக்களையும் சிஆர்எம்-க்குள் ஒருங்கிணைத்து இதன் மூலம் சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களை அளிப்பதே.
அதே போல், மேம்படுத்தப்பட்ட Catalyst மற்றும் பிரைவசி பாதுகாப்பு Apptics சொல்யுஷன் இணைந்து டெவலப்பர்களுக்காக இதுவரை இல்லாத முறையில் கருத்தாக்கத்திலிருந்து குறியாக்கம் செய்வதையும் செயல்படுத்தல் முதல் பகுப்பாய்வு வரையிலும் அனைத்தையும் செய்து முடிக்கும்.
Zoho Apptics என்பது iOS, macOS மற்றும் Android போன்ற பல்வேறு தளங்களில் உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன்களின் பயன்பாடு மற்றும் செயல்திறனைக் கண்காணிக்க டெவலப்பர்களுக்கு உதவும் ஒரு பகுப்பாய்வு தீர்வாகும். வெவ்வேறு டூல்களிலிருந்து தனிப்பயன்களுக்குரிய சொல்யூஷன்களை உருவாக்குவது டெவலப்பர்களுக்கு சவாலான விஷயம். டெவலப்பர்களை ஆதரிக்கும் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், எங்களின் தற்போதைய சலுகைகளை தொடர்ந்து ஆழப்படுத்தி வருகிறோம், மற்றவற்றை விரிவுபடுத்துகிறோம், என்று ஜோஹோ கார்ப்பரேஷனின் உயரதிகாரி ராஜு விகேஸ்னா கூறியுள்ளார்.