Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Zoho-வின் ஓ.என்.டி.சி மேடை ’விக்ரா’ விற்பனையாளர் செயலி அறிமுகம்!

ஜோஹோ நிதி மற்றும் செயல்பாடுகள் மேடையில் உருவாக்கப்பட்டுள்ள விக்ரா செயலி, இந்திய வர்த்தகங்கள் மற்றும் ஓ.என்.டி.சி வலைப்பின்னல் வாயிலாக இந்தியாவின் பரந்த சந்தைக்கான இணைப்பாக அமைகிறது.

Zoho-வின் ஓ.என்.டி.சி மேடை ’விக்ரா’ விற்பனையாளர் செயலி அறிமுகம்!

Wednesday September 25, 2024 , 2 min Read

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாஸ் சேவை வழங்கும் ஜோஹோ, ஓ.என்.டி.சி (ONDC) மேடையில் விற்பனை செய்வதற்கான விக்ரா (Vikra) செயலி மற்றும் வர்த்தகங்கள் தங்களுக்கான பிரத்யேக ஐ.ஓடி.தீர்வுகளை உருவாக்கி பயன்படுத்த வழி செய்யும் லோ கோடு மேடை ஜோஹோ ஐ.ஓ.டி ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.

நிறுவனத்தின் ஆண்டு பயனாளிகள் மாநாடான ஜோஹோலிக்சில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2023ம் ஆண்டில் நிறுவனம் 31 சதவீத வாடிக்கையாளர் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

zoho
“புதிய சேவைகளுக்கான ஆய்வு முயற்சியில் தீவிர கவனம் செலுத்துகிறோம். அனைத்து தொழில்நுட்ப ஸ்டேக்கிலும் ஏஐ திறனை ஒருங்கிணைக்கும் அதே நேரத்தில், விக்ரா மற்றும் ஜோஹோ ஐஓடி போன்ற புதிய சேவைகளை புதுமையாக்கம் மூலம் உருவாக்கி அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்துகிறோம். ஏஐ நுட்பத்தை வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவது மற்றும் ஆழமான உள்ளொளி வழங்கலில் மேம்படுத்துவதற்கான சூழல் சார்ந்த புரிதல் சேவையை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்,” என ஜோஹோ இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

“தொடர்ச்சியான மேம்பாட்டிற்கான இந்த உறுதி, இந்தியா முழுவதும் உள்ள பெரிய அரசு அமைப்புகள் மற்றும் பெரிய நிறுவனங்களின் விருப்ப பங்குதாரராக எங்களை உருவாக்கியுள்ளது.

நிறுவனங்கள் மென்பொருள் தீர்வுகளில் இருந்து மேலும் மதிப்பை எதிர்நோக்கும் மற்றும் பெரிய நிறுவனங்கள் தேவையற்ற பரப்பை குறைக்க முயற்சிக்கும் நிலையில், எங்களது இரண்டாவது பெரிய சந்தை இந்தியாவில் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறோம்? என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு இ-காமர்ஸ் நல்ல வாய்ப்பாக உள்ளது. ஆனால், சில்லறை சந்தையில் 7 சதவீதம் மட்டுமே உள்ளது. தொழில்நுட்ப நோக்கில் சவால் மற்றும் அதிக சந்தை கமிஷன் ஆகியவை இந்த இடைவெளிக்கு காரணமாக அமைகின்றன.

ஜோஹோ நிதி மற்றும் செயல்பாடுகள் மேடையில் உருவாக்கப்பட்டுள்ள 'விக்ரா' செயலி, இந்திய வர்த்தகங்கள் மற்றும் ஓ.என்.டி.சி வலைப்பின்னல் வாயிலாக இந்தியாவின் பரந்த சந்தைக்கான இணைப்பாக அமைகிறது. இந்த செயலி மூலம், வர்த்தகங்கள் இந்த வலைப்பின்னலில் எளிதாக இணைந்து, கடைகள் அமைத்து, பொருட்கள் பட்டியலை உருவாக்கி, பேடிஎம், ஓலா மற்றும் ஸ்னேப்டீல் விற்பனை செயலிகள் மூலம் விற்கத்துவங்கலாம்.

வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக நோட்டிபிகேஷன், சுய சேவை டெலிவரி அல்லது Delhivery சேவைகளை வழங்கும் வாய்ப்புகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும், இணையும் போது, பொருட்கள் பட்டியல் உருவாக்கம், செயல்பாடுகள் நிர்வாகம், பேமெண்ட் தீர்வுகள், வாடிக்கையாளர் தீர்வு ஆகியவற்றுக்கு தனிப்பட்ட சேவை வழங்கப்படுகிறது.

ஜோஹோ ஐஓடி, தேவைக்கு ஏற்ப அமைத்துக்கொள்ளக்கூடிய லோ கோடு மேடை. வர்த்தகங்களுக்கு தங்கள் செயல்பாடுகளை சீராக்குவதற்கான தரவுகள், புரிதலை அளிக்க வல்லது. நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தானியங்கிமயமாக்கி, சந்தை தரவுகள் சார்ந்த முடிவுகளை மேற்கொள்ள உதவுகிறது.

பல்வேறு துறைகளுக்கான ஏற்கனவே உருவாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குகிறது. உற்பத்தி திறன் மற்றும் இயந்திர நேரம் அறிவதற்கான தொழில் ஐஓடி, ஒருங்கிணைந்த நிர்வாகத்திற்கான ஸ்மார்ட் பில்டிங், செயல்திறன் கண்காணிப்பிற்கான எரிசக்தி நிர்வாகம் ஆகியவை இதில் அடங்கும்.

zoho

ஆரம்பம் முதல் இறுதி வரையான திறன்கள் மற்றும் ஒருங்கிணைப்பையும் இந்த மேடை வழங்குகிறது. கேஸ் கண்காணிப்பு மற்றும் காற்றின் தரம் அறிதல் உள்ளிட்ட தொலைதூர நிர்வாக சவால்கள் மற்றும் செயல்திறன், நிகழ்நேர தகவல்களுக்கான இணைக்கப்பட்ட ஓ.இ.எம் ஆகியவை இதில் அடங்கும். நிறுவனங்கள் தொலைதூர கண்காணிப்பு வாயிலாக மதிப்பை அதிகரிக்க இவை உதவுகின்றன.

மேலும், பல்வேறு வகை சிறிய, நடுத்தர, பெரிய மொழி மாதிரிகளை உருவாக்கி, ஏஐ திறன்களை குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக தனது சேவைகளில் ஒருங்கிணைத்து வருகிறது. இந்த அணுகுமுறை, முக்கிய வர்த்தக சூழலை உள்ளடக்கிய முடிவெடுக்க தேவையான புரிதல்களை நிறுவனங்களுக்கு வழங்க உதவுகிறது.

ஜோஹோஒன், ஜோஹோ சிஆர்.எம்., ஜோஹோ புக்ஸ், ஜோஹோ பியுபில் ஆகிய சேவைகள் இந்தியாவில் வருவாய் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

ஐடி வன்பொருள், தொடர்புடைய சேவைகள், நிதிச்சேவைகள், உற்பத்தி, சில்லறை விற்பனை, ஐடி அல்லாத தொழில்முறை சேவைகள் உள்ளிட்ட துறைகள் நிறுவன வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன.


Edited by Induja Raghunathan