97.76% 2000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்குத் திரும்பி வந்து விட்டன - ஆர்பிஐ தகவல்
ரூ.2000 தாள்களில் 97.76 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாகவும், மக்களிடம் ரூ.7,961 கோடி மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் மட்டுமே இன்னும் இருப்பதாகவும் மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
ரூ.2000 தாள்களில் 97.76 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாகவும், மக்களிடம் ரூ.7,961 கோடி மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் மட்டுமே இன்னும் இருப்பதாகவும் மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
மே 19, 2023 அன்று, ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
“அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என ஆர்பிஐ அறிவித்த மே 19, 2023 அன்று வணிகம் முடிவடையும் போது ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்தில் இருந்த ரூ.2000 ரூபாய் தாள்களின் மொத்த மதிப்பு, ரூ.7,961 கோடியாகக் குறைந்துள்ளது. ஆகவே, மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 97.76 சதவீதம் திரும்பி வந்துவிட்டன,” என்று ஏப்ரல் 30, 2024 அன்று ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் கூறியது.
ரூ.2000 தாள்கள் செல்லுபடியாகத்தக்கதே. நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மக்கள் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றிக்கொள்ளலாம். மக்கள் இந்தியாவில் உள்ள தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க, எந்த ஒரு தபால் நிலையத்திலிருந்தும் இந்திய அஞ்சல் மூலம் ரூ.2000 வங்கி நோட்டுகளை அனுப்பலாம்.
முதலில், ரூ.2000 நோட்டுகளை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் பொது அல்லது தனியார் நிறுவனங்கள் செப்டம்பர் 30, 2023க்குள் வங்கிக் கணக்குகளில் ரூ.2000 தாள்களை டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ செய்யலாம் என்று கூறப்பட்டது.
அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்யவோ, மாற்றவோ செய்யலாம்.
2016 நவம்பரில், நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரூ.2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.