இந்தியாவில் மேலும் 4 ஸ்டோர்களைத் திறக்கும் ‘ஆப்பிள்’
ஆப்பிள் நிறுவனம் முதன் முதலாக ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்பில் வெளியாகும் iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max சாதனங்களையும் இந்த மாதம் வெளியிடவிருக்கிறது.
ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் இந்தியாவில் புனே, பெங்களூரு, டெல்லி-என்சிஆர் மற்றும் மும்பையில் மேலும் நான்கு விற்பனை நிலையங்களைத் திறக்கவுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் முதன் முதலாக ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்பில் வெளியாகும் iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max சாதனங்களையும் இந்த மாதம் வெளியிடவிருக்கிறது.
இது தொடர்பாக ஆப்பிள் ரீடெய்ல் சீனியர் துணைத் தலைவர் கூறும்போது,
“இந்தியா முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களின் படைப்பாற்றல் மற்றும் ஆர்வத்தால் நாங்கள் ஈர்க்கப்பட்டு இந்தியாவில் அதிகமான கடைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளதால், எங்கள் குழுக்களை உருவாக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் அற்புதமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கண்டறிந்து ஷாப்பிங் செய்வதற்கும், எங்கள் அசாதாரண, அறிவுள்ள குழு உறுப்பினர்களுடன் இணைவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகளை உருவாக்குவதை லட்சியமாகக் கொண்டுள்ளோம்,” என்றார்.
ஏப்ரல் 2023ல், டெல்லியிலும் மும்பையிலும் என்று ஆப்பிள் தனது இரண்டு கடைகளை இந்தியாவில் திறந்தது. இப்போது பெங்களூரு, டெல்லி, புனே, மும்பையில் மேலும் 4 ஸ்டோர்களைத் திறக்கவுள்ளது. இந்த ஸ்டோர்கள் அடுத்த ஆண்டுவாக்கில் திறக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் 2017ஆம் ஆண்டு இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட iPhone 16 Pro மற்றும் Pro Max சாதனங்கள் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ளது. இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸின் உயர்தர சப்ளை இந்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.