Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

சேலத்தில் ஸ்டார்ட் நெட் நடத்திய செயற்கை நுண்ணறிவு மாநாடு!

தொழில்நுட்ப நிறுவனம் 'ஸ்டார்ட்நெட்' சேலத்தில் அண்மையில் நடத்திய ஜென் ஏஐ. கனெக்ட் மாநாடு மற்றும் கண்காட்சியில், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன நுட்பங்கள் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும், செயற்கை நுண்ணறிவு தமிழ்நாடு (AITN) எனும் லாப நோக்கிலாத அமைப்பின் துவக்கம் அறிவிக்கப்பட்டது.

சேலத்தில் ஸ்டார்ட் நெட் நடத்திய செயற்கை நுண்ணறிவு மாநாடு!

Friday May 03, 2024 , 1 min Read

தொழில்நுட்ப நிறுவனம் 'ஸ்டார்ட்நெட்' சேலத்தில் அண்மையில் நடத்திய ஜென் ஏஐ. கனெக்ட் மாநாடு மற்றும் கண்காட்சியில், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன நுட்பங்கள் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும், செயற்கை நுண்ணறிவு தமிழ்நாடு (AITN) எனும் லாப நோக்கிலாத அமைப்பின் துவக்கம் அறிவிக்கப்பட்டது.

வர்த்தக நிறுவனங்களுக்கு புதுமையாக்க தீர்வுகளை வழங்கி வரும் சேலத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்நெட் நிறுவனம், ஏப்ரல் 27ம் தேதி, சேலத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான 'ஜென் ஏஐ.கனெக்ட்' மாநாட்டு மற்றும் கண்காட்சியை நடத்தியது.

இந்த மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், 45க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்றனர் என தெரிவித்துள்ளது. 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றன.

ai summit

இந்த நிகழ்ச்சியில், பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள், குறிப்பிட்ட துறைகளில் பயன்பாடு, ஸ்டார்ட் அப் காட்சி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் துறை சார்ந்த வல்லுனர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும், மினி ஹேக்கத்தான்கள், பொருட்கள் அறிமுகம் ஆகியவை நிகழ்ந்தன. பல்வேறு துறைகளில் ஏஐ கொண்டு வரக்கூடிய பயன்பாடு மற்றும் மாற்றத்தை இவை உணர்த்தின.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன நுட்பங்கள் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும், செயற்கை நுண்ணறிவு தமிழ்நாடு (AITN) எனும் லாப நோக்கிலாத அமைப்பின் துவக்கம் அறிவிக்கப்பட்டது.

Gen ai summit

சேலத்தை சேர்ந்த ஏஐ நிறுபனம் Zauto.ai, ஆதரவுடன் இந்த மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில், ஸ்டார்ட் அப் டிஎன் திட்ட இயக்குனர், சி.இ.ஓ.சிவராஜா ராமநாதன், சிறப்புரை நிகழ்த்தினார். ஜூலி வென்சர்ஸ் பங்குதாரர் வி.சுப்பிரமணியன், Ailaysa.com நிறுவனர் ஆழி.செந்தில்நாதன், என்லைட்டன் ஏஞ்சல் பண்ட் பாட்னர் அரவிந்த் சுப்பிரமணியன், தொழில்நுட்ப வல்லுனர் செந்தில் நாயகம் உள்ளிட்டோ உரை நிகழ்த்தினர்.

அடுத்த ஆண்டு இந்த மாநாடு இன்னும் பெரிய அளவில் நடைபெற திட்டமிட்டப்பட்டுள்ளதாக ஸ்டார்ட் நெட் தெரிவித்துள்ளது.


Edited by Induja Raghunathan