Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

2023-24 நிதியாண்டில் இந்தியாவில் நிறுவப்பட்ட 1.85 லட்சம் புதிய நிறுவனங்கள்- அரசு தகவல்!

1,59,524 நிறுவனங்கள் 2022-23-ல் ரூ.18,132.16 கோடி பெய்ட்-அப் கேப்பிடலுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2023-24 நிதியாண்டில் இந்தியாவில் நிறுவப்பட்ட 1.85 லட்சம் புதிய நிறுவனங்கள்- அரசு தகவல்!

Monday May 06, 2024 , 1 min Read

2023-24 நிதியாண்டில் நாட்டில் 1.85 லட்சம் புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகமாகும். மேலும், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 16,600 நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

1,59,524 நிறுவனங்கள் 2022-23-ல் ரூ.18,132.16 கோடி பெய்ட்-அப் கேப்பிடலுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மார்ச் 2024 இறுதியில், நாட்டில் மொத்தம் 26,63,016 நிறுவனங்கள் இருந்தன, அவற்றில் 16,91,495 நிறுவனங்கள் அல்லது 64% நிறுவனங்கள் மட்டுமே செயலில் உள்ளன. 9,31,644 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டன, 2,470 செயலற்ற நிறுவனங்கள் மற்றும் 10,385 நிறுவனங்கள் கலைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 27,022 நிறுவனங்கள் அதிகாரபூர்வ பதிவேடுகளில் இருந்து நீக்கும் நடைமுறைகளில் உள்ளன.

mumbai night

2023-24-ம் நிதியாண்டில், மொத்தம் 1,85,312 நிறுவனங்கள் ரூ.30,927.40 கோடி பெய்ட்-அப் கேப்பிடலுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் மார்ச் மாதத் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களில் 71% சேவைத் துறையிலும், 23% தொழில்துறையிலும், 6% விவசாயத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநிலங்களைப் பொறுத்தவரை, 2023-24ல் மகாராஷ்டிராவில் 17.6% புதிய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. மார்ச் 31, 2024 நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 5,164 வெளிநாட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 3,288 நிறுவனங்கள் அல்லது 64% நிறுவனங்கள் மட்டுமே செயலில் உள்ளன.

மார்ச் மாதத்தில் மட்டும் 42,041 புதிய நிறுவன இயக்குனர்கள் அடையாள எண்கள் பதிவு செய்யப்பட்டதாக அமைச்சகத் தகவல் கூறுகிறது.

தகவல் -பிடிஐ