Gold Rate Chennai: தங்கம் விலை சற்றே குறைந்தது! சவரன் விலை ரூ.54 ஆயிரத்திற்கும் குறைவு!
தங்கம் விலை இன்று (வியாழக்கிழமை, 25-4-2024) காலை நிலவரப்படி சென்னையில் ஆபரண மற்றும் சுத்தத் தங்கம் ஆகியவற்றின் விலைகள் சற்றே குறைந்தன.
தங்கம் விலை இன்று (வியாழக்கிழமை, 25-4-2024) காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரண மற்றும் சுத்தத் தங்கம் ஆகியவற்றின் விலைகள் சற்றே குறைந்தன. கடந்த வாரம் சாதனை உயர்வுக்குச் சென்று ரூ.55,000 என்ற விலையையும் கடந்து சென்ற நிலையில் குறைந்து பிறகு மீண்டும் நேற்று உயர்வடைந்தது. ஆனால், இன்று மீண்டும் சற்றே குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (25-04-2024): சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.20 குறைந்து 6,710 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 குறைந்து ரூ.7,320-க்கும் விற்று வருகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை 160 ரூபாய் குறைந்து ரூ.53,680 -க்கு விற்பனை ஆகிறது.
சென்னை சந்தையில் 22 காரட் தங்கம் 10 கிராம் விலை ரூ.200 குறைந்து 67,100 ரூபாய்க்கும், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.220 குறைந்து ரூ.73,200 ஆகவும் உள்ளது. மும்பைச் சந்தையிலும் தங்கம் விலை இன்று குறைந்தது.
இன்றைய தினம் (25-4-2024) ஒரு கிலோ வெள்ளி விலை குறைந்து ரூ.86,000 ஆகவும் உள்ளது.
தங்கம் விலை மீண்டும் குறைவு ஏன்?
உலக அளவில் தங்கத்திற்கான தேவை குறைந்ததாலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதாலும், மற்றும் உள்ளூர் தேவை காரணங்களினாலும் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் தவிர்க்க முடியாதது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,710(மாற்றம்:ரூ.20குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,680(மாற்றம்:ரூ.160குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,320(மாற்றம்:ரூ.22குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58560(மாற்றம்:ரூ.176 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,625(மாற்றம்:ரூ.35குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,000(மாற்றம்:ரூ.280குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,227(மாற்றம்:ரூ.38குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,816(மாற்றம்:ரூ.304குறைவு)