Gold Rate Chennai: தங்கம் விலை இன்று சரிவு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை இன்று (செவ்வாய்க் கிழமை, 23-4-2024) காலை நிலவரப்படி சென்னையில் ஆபரண மற்றும் சுத்தத் தங்கம் ஆகியவற்றின் விலைகள் சரிந்தன. கடந்த வாரம் சாதனை உயர்வுக்குச் சென்று ரூ.55,000 என்ற விலையையும் கடந்து சென்ற நிலையில் இன்று சவரன் விலை ரூ.1160 குறைந்து ரூ.53,600 ஆக உள்ளது.
தங்கம் விலை இன்று (செவ்வாய்க் கிழமை, 23-4-2024) காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரண மற்றும் சுத்தத் தங்கம் ஆகியவற்றின் விலைகள் சரிந்தன. கடந்த வாரம் சாதனை உயர்வுக்குச் சென்று ரூ.55,000 என்ற விலையையும் கடந்து சென்ற நிலையில் இன்று சவரன் விலை ரூ.1160 குறைந்து ரூ.53,600 ஆக உள்ளது.
தங்கம் விலை நிலவரம் (23-04-2024): சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.145 குறைந்து 6,700 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.157 குறைந்து ரூ.7,310-க்கும் விற்று வருகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை 1,160 ரூபாய் குறைந்து ரூ.53,600-க்கு விற்று சரிந்துள்ளது.
சென்னை சந்தையில் 22 காரட் தங்கம் 10 கிராம் விலை ரூ.1,450 குறைந்து 67,000 ரூபாய்க்கும், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.1,570 சரிந்து ரூ.73,100 ஆகவும் உள்ளது. மும்பைச் சந்தையிலும் தங்கம் விலை இறங்குமுகம் கண்டுள்ளது.
இன்றைய தினம் (23-4-2024) ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2.50 குறைந்து ரூ.86.50 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,500 சரிந்து ரூ.86,500 ஆகவும் உள்ளது. .
தங்கம் விலை சரிவு ஏன்?
வாரம் முழுதும் தங்கம் விலைகளில் நிலையான தன்மை என்பது எப்போதும் இருக்காது. பணவீக்க விகிதங்களில் மாற்றம் இருந்தாலும் பாதுகாப்பான முதலீடு தங்கமே. அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகம் விரும்புகின்றனர். சில வேளைகளில் தற்செயலான அன்றைய தின தேவைப்பாடு குறைவு காரணங்களால் தங்கம் விலை குறையும்.
இன்றைய குறைவுக்குக் காரணம் உலக அளவில் தங்கம் விலை சரிந்துள்ளதும் மேற்கு ஆசியப் பதற்றம் குறைந்ததனாலும் பாதுகாப்பான தங்கம் முதலீட்டை முதலீட்டாளர்கள் சற்றே குறைத்துள்ளனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,700(மாற்றம்:ரூ.145குறைவு)
> 22 காரட் தங்கம்8 கிராம்ரூ.53600(மாற்றம்:ரூ.1,160குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,310(மாற்றம்:ரூ.157குறைவு)
> 24 காரட் தங்கம் 8கிராம்ரூ.58480(மாற்றம்:ரூ.1,256குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,615(மாற்றம்:ரூ.140குறைவு)
> 22 காரட் தங்கம் 8கிராம்ரூ.52920(மாற்றம்:ரூ.1,120குறைவு)
> 24 காரட் தங்கம் 1கிராம்-ரூ.7,216(மாற்றம்:ரூ.153குறைவு)
> 24 காரட் தங்கம் 8கிராம்ரூ.57728(மாற்றம்:ரூ.1,224குறைவு)