Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

ஏடிஎம்-இல் நிறுத்த மாட்டேன்; ஜி-பே கிடையாது: வைரலான சென்னை ஆட்டோ ட்ரைவரின் (பிடி) வாதம்!

ஜீபே, பேடிஎம் உள்ளிட்ட யூபிஐ (UPI) என்பது பயன்பாட்டிற்கு வந்தது முதலே பலரும் அதை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஆனால், இந்தக் கதை சென்னை ஆட்டோக்காரரின் புதிய ‘ரூல்ஸ்’ வைரல் ஆகியுள்ளது.

ஏடிஎம்-இல் நிறுத்த மாட்டேன்; ஜி-பே கிடையாது: வைரலான சென்னை ஆட்டோ ட்ரைவரின் (பிடி) வாதம்!

Monday April 08, 2024 , 2 min Read

ஜி-பே, பேடிஎம் உள்ளிட்ட யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இண்டெர்ஃபேஸ் (UPI) என்பது பயன்பாட்டிற்கு வந்தது முதலே 20 பைசாவுக்கும் 50 பைசாவுக்குமெல்லாம் அதைப் பயன்படுத்தி வியாபாரிகளின் வயற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் கதைகளையும் நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், இந்தக் கதை சென்னை ஆட்டோக்காரரின் வைரலான புதிய ‘ரூல்ஸ்’ பற்றிய கதையாகும்.

பொதுவாக மக்கள் யாரும் இப்போது ரொக்கம் எடுத்துச் செல்வதில்லை. மொபைல் போன் தான் அவர்களது மணிபர்ஸ் என்று மாறிவிட்டது, இந்தக் காலத்தில் ஆட்டோ ட்ரைவர் ஒருவர் தான் ஜி-பே, பேடிஎம் போன்ற யுபிஐ மூலம் பணம் செலுத்துவதை ஏற்க மாட்டேன் என்றும் பணம் எடுக்க ஆட்டோ ஏடிஎம்-களில் நிற்காது என்றும் போர்டே போட்டு வைத்தால் அவர் ஆட்டோவில் ஏறுபவர்கள் கதியைச் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

இப்படி ஆட்டோக்காரரைப்பற்றிய பதிவு ஒன்றை பெண் ஒருவர் ஆட்டோவில் ஒட்டப்பட்டுள்ள இத்தகைய விசித்திர ரூல்ஸ் வாசகத்தை படம்பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிட, அந்தப் பதிவு உடனடியாகப் பற்றிக் கொண்டு வைரலானது.

auto gpay

இவர் X தளத்தில் இட்ட பதிவில் ஆட்டோவினுள் இருந்த வாசகம் காணப்பட்டது :

"Gpay not available. No stop for ATM withdrawal.” அதாவது, ஜி-பே இல்லை பணம் எடுக்க ஏடிஎம்-களிலும் நிறுத்த மாட்டோம் என்று ரூல்ஸ் போட்டால் பாவம் பயணிகள் நிலை என்ன ஆவது. எல்லோரும் ரொக்கத்தைச் சுமந்து கொண்டா செல்வார்கள்?
இந்தப்பெண் ஆட்டோவை செயலி மூலம் புக் செய்துள்ளார், அதனால் ஆட்டோக்காரரின் இந்த விசித்திர ரூல்ஸ் அவருக்குத் தெரியவில்லை. இவரை சவாரிக்கு ஏற்றிக் கொள்ளும் முன்பும் இது பற்றி ட்ரைவர் வாயைத் திறக்கவில்லை, அவர் அந்த நோட்டிஸை ஆட்டோவுக்கு வெளியே ஒட்டி வைக்காமல் சாமர்த்தியமாக உள்பக்கம் ஒட்டி வைத்துள்ளார்.

இந்தச் செய்தி பகிரப்பட்டவுடன் 2 லட்சம் வியூக்களையும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் அள்ளியது. இதற்கு கமெண்ட் செக்‌ஷனில் வினையாற்றியவர்கள் பலரும் ‘பாவம் ஆட்டோ ஓட்டுநரின் முந்தைய அனுபவம் கசப்பானதாக இருந்திருக்கும்’ என்ற ரீதியிலும் பதிலளித்துள்ளனர்.

மேலும் ஒருவர், ‘ஏடிஎம்-ல் நிற்காது என்றால் பெட்ரோல் போட பங்கிலும் நிறுத்தக் கூடாது’ என்று பதிவிட்டுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் இதற்கு நேர் எதிரான ட்ரெண்டையும் குறிப்பிட்டுள்ளார், அதாவது, அங்கு ரொக்கம் வாங்க மாட்டார்களாம், யுபிஐ பேமண்ட் தானாம்.