ஜிஎஸ்டி வசூல் சாதனை உயர்வு - தமிழ்நாடு 5-வது இடம்!
ஜிஎஸ்டி என்று சுருக்கமாக அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஏப்ரலில் 12.4 % அதிகரித்து ரூ.2.10 லட்சம் கோடியாக சாதனை வசூல் படைத்துள்ளது. இத்தகவலை மத்திய நிதியமைச்சகம் புதனன்று வெளியிட்டது. ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது.
ஜிஎஸ்டி என்று சுருக்கமாக அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஏப்ரலில் 12.4% அதிகரித்து ரூ.2.10 லட்சம் கோடியாக சாதனை வசூல் படைத்துள்ளது. இத்தகவலை மத்திய நிதியமைச்சகம் புதனன்று வெளியிட்டது. ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு 13.4 சதவீதம் அதிக உள்நாட்டு பரிவர்த்தனைகளால் இந்த ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு உந்தப்பட்டதாகவும், வரி ஏய்ப்புக்கு எதிரான நடவடைக்கைகளும் தணிக்கைகளும் காரணம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அறிமுகமாகி 7 ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச வரி வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக 2 லட்சம் கோடி இலக்கைக் கடந்துள்ளது. ஏப்ரல் 2023-ம் ஆண்டில் இதற்கு முன்னர் ஜிஎஸ்டி வசூல் 1.87 லட்சம் கோடியை எட்டியது. அதனை இப்போது கடந்து விட்டது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,
“ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி - அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான சரக்குகள் மற்றும் சேவைகளின் மீது விதிக்கப்படும் வரிகளில் மாநிலங்களுக்கான நிலுவைத் தொகை எதுவும் இல்லை," என்றார்.
“மத்திய அரசுக்கு 50,307 கோடியும், மாநிலங்களுக்கு 41,600 கோடியும் #ஐஜிஎஸ்டி கிளியர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐஜிஎஸ்டி தீர்வு ரூ.91,907 கோடி என்பது உண்மையான நிகர ஐ.ஜி.எஸ்.டி வசூலான ரூ.87,494 கோடியை விட ரூ.4,413 கோடி அதிகம். மாநிலங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி செட்டில்மெண்டில் நிலுவை எதுவும் இல்லை...” என்று எக்ஸ் தளத்தில் நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.
ரீஃபண்டுகளைக் கணக்கிட்ட பிறகு, ஏப்ரல் மாதத்தில் நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.92 லட்சம் கோடியாக உள்ளது., இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 15.5 சதவீதம் அதிகமாகும்.
ஏப்ரல் மாதத்திற்கான மாநில வாரியான ஜிஎஸ்டி வசூல் தரவுகளின் படி, 38 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (மத்திய அதிகார வரம்பு உட்பட), 19 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஜிஎஸ்டி வசூலில் தேசிய சராசரியான 12.4 சதவீத வளர்ச்சி விகிதத்தை விட அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
மகாராஷ்டிரா 13% வளர்ச்சி கண்டு ரூ.37,761 கோடி ஜிஎஸ்டி வசூலுடன் முதலிடம் வகிக்கிறது. இரண்டாவதாக 9% வளர்ச்சியுடன் கர்நாடகா ரூ.15,908 கோடி வசூலுடனும், மூன்றாவதாக 13% வளர்ச்சியுடன் குஜராத் மாநில ஜிஎஸ்டி வசூல் ரூ.13,301 கோடியுடனும், நான்காவதாக உத்தரப் பிரதேசம் 19% வளர்ச்சியுடன் ரூ.12,290 கோடியுடனும் 5வதாக தமிழ்நாடு 6% வளர்ச்சியுடன் ரூ.12,201 கோடி ஜிஎஸ்டி வருவாயுடனும் உள்ளது.