Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

இந்தியாவில் 2024-ல் வாய்ப்பு மிகுந்த 3 வேலைகள் - லிங்க்டுஇன் குறிப்பும் கைடன்ஸும்

2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் வேலைவாய்ப்புச் சந்தையில் மூன்று கவனிக்கத்தக்க கரியர்கள் குறித்த வழிகாட்டுதல் இது.

இந்தியாவில் 2024-ல் வாய்ப்பு மிகுந்த 3 வேலைகள் - லிங்க்டுஇன் குறிப்பும் கைடன்ஸும்

Thursday March 07, 2024 , 3 min Read

இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் தொழில்முறைப் பரப்பை மறுவடிவமைக்கும் மூன்று கரியர்கள் மிக வெகமாக வளர்ச்சி கண்டு வருகின்றன. அவை: 1. குளோசிங் மேனேஜர் (Closing Manager), 2. இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட் (Influencer Marketing Specialist), 3. டிசைன் ஸ்பெஷலிஸ்ட் (Design Specialist).

2024-ஆம் ஆண்டில், ‘லிங்க்டு இன்’ (LinkedIn) மூலம் அடையாளம் காணப்பட்ட மூன்று வேகமாக வளர்ந்து வரும் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக, இந்த மூன்று வேலைப் பிரிவுகளும் இந்திய வேலைச் சந்தை குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண்கிறது என்றே கூறலாம்.

குளோசிங் மேனேஜர், இன்ஃப்ளுயென்சர் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் டிசைன் ஸ்பெஷலிஸ்ட் ஆகிய மூன்று துறைகளும் 79% வளர்ச்சி கண்டு வருகின்றன. இந்தப் போக்கு லிங்க்டு இன் தளத்தில் காணப்படும் அதிகப்படியான வேலை தேடல் நடவடிக்கைகளுடன் சரிவர பொருந்தி வருகிறது. மேலும் தொழில்முறை நிலப்பரப்பில் வேகமாக ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் பிரதிபலிக்கிறது.

குளோசிங் மேனேஜர்:

என்ன செய்ய வேண்டும்? - ஒரு குளோசிங் மேனேஜர் பதவி வகிப்பவர் பரிவர்த்தனைகளின் இறுதிக் கட்டங்களை மேற்பார்வையிடுகிறார். அனைத்து அம்சங்களும் திறமையாகவும் திறம்படவும் முடிக்கப்படுவதை உறுதி செய்கிறார். ஒப்பந்தங்கள், ஒப்பந்ததாரர்கள் மூலம் பணி நிறைவேற்றம் பெறும் தொழில்களில் குளோசிங் மேனேஜரின் பங்கு முக்கியமானது.

career

என்னென்ன திறமைகள் தேவை? - வலுவான நிறுவன மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் தேவை. விவரங்களில் கூடுதல் கவனம் செலுத்துதல் மற்றும் சிக்கலான செயல்முறைகளை நிர்வகிக்கும் திறன் ஆகியவை இந்தப் பதவிக்கு தேவைப்படும் முக்கியமான திறமைகள் ஆகும்.

வளர்ச்சி இயக்கிகள்: வணிக பரிவர்த்தனைகளின் சிக்கலான தன்மை மற்றும் ஒப்பந்தங்களின் இறுதி கட்டங்களில் சிறப்பு மேற்பார்வையின் தேவை ஆகியவற்றால் குளோசிங் மேனேஜர்களுக்கான தேவை அதிகரிக்கலாம்.

இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட்:

பணி என்ன? - சமூக ஊடக ஆளுமைகளின் செல்வாக்கை மேம்படுத்தும் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை உத்தியாகக் கொண்டு செல்லுதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவை இந்த வேலையின் முக்கிய அங்கம். நவீன டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிலப்பரப்பில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

என்னென்ன திறமைகள் வேண்டும்? - சமூக ஊடகங்களில் எழுதும் திறன், கையாளும் திறன், சமூக ஊடகங்களின் நெளிவு சுளிவு, பரப்பெல்லை, வீச்சு ஆகியவை பற்றி தெரிந்திருக்க வேண்டும். பலதரப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் என்ன செய்கின்றன என்பது பற்றிய அறிவு தேவை. பல்வேறு சமூக ஊடகங்களை புரிந்து கொள்ளுதல், படைப்பாற்றல் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்கும் திறன் ஆகியவை முக்கியமானவை.

வளர்ச்சி இயக்கிகள்: இந்த வேலைவாய்ப்புகள் பெருகுவதற்கான காரணம் மற்றும் சந்தைத் தேவையின் அதிகரிப்பு ஆகிய தேவைகள் உருவாகியுள்ளமையே. சந்தைப்படுத்தல் உத்திகளில் சமூக ஊடகங்களின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தையும் இலக்கு பார்வையாளர்களை அடைவதில் செல்வாக்கு செலுத்துபவர்களின் செயல்திறனையும் பிரதிபலிக்கிறது.

டிசைன் ஸ்பெஷலிஸ்ட்:

வேலை எதைப் பற்றியது? - வடிவமைப்பு வல்லுநர்கள் கிராபிக்ஸ், தளவமைப்புகள் அல்லது பிற வடிவமைப்பு கூறுகள் போன்ற குறிப்பிட்ட வணிக அல்லது விளம்பரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் காட்சிக் கருத்துகள் மற்றும் வடிவமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றனர்.

jobs

தேவைப்படும் திறமை: வடிவமைப்பு மென்பொருளில் தேர்ச்சி, படைப்பாற்றல், அழகியல் பற்றிய வலுவான பார்வை. மேலும், தற்போதைய வடிவமைப்பு போக்குகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

வளர்ச்சி இயக்கிகள்: வணிகங்களுக்கான காட்சி வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் மயம் ஆகியவற்றின் முக்கியத்துவம் இந்த பணிகளுக்கான தேவையை அதிகரித்திருக்கலாம்.

வடிவமைப்பு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றிற்கான தேவை அதிகரித்து வருகிறது. மேலும், இது வேலை விருப்பத் தெரிவு மற்றும் சந்தையின் தேவைப்பாடுகளில் பரந்துபட்ட மாற்றம் ஏற்பட்டுள்ளதை அறிவுறுத்துகிறது.

வேலைச் சந்தையில் போட்டி அதிகமிருப்பதால் தொழில் வல்லுநர்கள் தங்கள் தற்போதைய தொழில்கள் அல்லது துறைகளுக்கு வெளியே பணிகளைத் தேடுகிறார்கள். புதிய வேலைக்கான பாதைகளை ஆராய்வதில் 79% வெளிப்படைத்தன்மையைக் காட்டுகிறது.

மேற்கூறிய வளர்ந்து வரும் வேலைவாய்ப்புத் துறைகளில் முக்கியமாக சிக்கல்களைத் தீர்க்கும் திறன், செயற்கை நுண்ணறிவுத் திறன், விமர்சன சிந்தனை, தகவல் தொடர்பு மற்றும் IT/இணையத் திறன்கள் ஆகியவை அடங்கும். AI-இன் விரைவான முன்னேற்றங்கள் இந்தியாவில் 2015 முதல் வேலை திறன் தேவைகளில் 30% மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

தொழில் வல்லுநர்கள் தங்கள் வேலை தேடுதல் உத்திகளை மாற்றியமைத்து, தங்கள் வேலை வேட்டையின் செயல்திறனை அதிகரிக்க AI-ஐ அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

மூலம்: Nucleus_AI


Edited by Induja Raghunathan