ரூ.10,500 முதல் சர்வதேச விமான கட்டணம் - Scoot ஏர்லைன்ஸின் ஜூலை சிறப்புச் சலுகை அறிவிப்பு!
சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட நகரங்களிலிருந்து பயணிப்போருக்கு 2026 செப்டம்பர் 1 முதல் நவம்பர் 8 வரை, நவம்பர் 20 முதல் டிசம்பர் 12 வரை மற்றும் 2027 பிப்ரவரி 23 முதல் மார்ச் 27 வரை பயணங்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான Scoot, தனது ‘ஜூலை தீமாட்டிக் சேல்’ (July Thematic Sale) சலுகையை ஜூலை 7 முதல் 12 வரை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் ஆசியா-பசிபிக் மற்றும் பிற சர்வதேச இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்த சலுகையின் ஒரு பகுதியாக, இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தாய்லாந்தின் புக்கெட் நகரத்துக்கு ஒரு வழி எக்கானமி வகுப்பு கட்டணம் ரூ.10,500 முதல் தொடங்குகிறது.
இந்த சலுகை கட்டணங்களில் பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகள் 2026 செப்டம்பர் 1 முதல் 2027 மார்ச் 27 வரை மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு பொருந்தும். Nha Trang, Bangkok, Chiang Rai, Bali, Jakarta, Sydney, Melbourne மற்றும் Perth உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது.
சில முக்கிய சலுகை கட்டணங்கள்:
- விசாகப்பட்டினம் – ஜகார்த்தா: ரூ.10,500 முதல்
- கோயம்புத்தூர் – கோலாலம்பூர்: ரூ.12,000 முதல்
- திருவனந்தபுரம் – நா ட்ராங்: ரூ.12,500 முதல்
- திருச்சிராப்பள்ளி – புக்கெட்: ரூ.12,500 முதல்
- அமிர்தசரஸ் – தைபே: ரூ.17,000 முதல்
- சென்னை – சிட்னி: ரூ.18,000 முதல்
மேலும், இந்த சலுகை காலத்தில் பயணச்சீட்டுகளை பதிவு செய்யும் KrisFlyer உறுப்பினர்கள், ஸ்கூட் விமானப் பயணங்களுக்கான மைல்களையும் பெற முடியும்.
அமிர்தசரஸிலிருந்து பயணிப்போருக்கு 2026 செப்டம்பர் 13 முதல் அக்டோபர் 23 வரை இந்த சலுகை பொருந்தும். சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் மற்றும் திருச்சி உள்ளிட்ட நகரங்களிலிருந்து பயணிப்போருக்கு 2026 செப்டம்பர் 1 முதல் நவம்பர் 8 வரை, நவம்பர் 20 முதல் டிசம்பர் 12 வரை மற்றும் 2027 பிப்ரவரி 23 முதல் மார்ச் 27 வரை பயணங்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
80-க்கும் மேற்பட்ட சர்வதேச இடங்களுக்கு சேவையளிக்கும் ஸ்கூட், இந்த சிறப்பு விற்பனை வாயிலாக பயணிகளுக்கு குறைந்த செலவில் வெளிநாட்டு சுற்றுலா அனுபவத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
ஸ்கூட் பற்றி
2012 ஜூன் மாதத்தில் தனது சேவையைத் தொடங்கிய ஸ்கூட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. 2017 ஜூலை மாதத்தில் Tigerair Singapore நிறுவனத்துடன் இணைந்த பிறகும், ‘ஸ்கூட்’ என்ற பிராண்டின் கீழ் தனது சேவைகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
