WhatsApp Chat Lock: இனி பர்சனல் சாட்களை மறைக்கலாம்... வாட்ஸ்அப் ‘சாட் லாக்’ செய்வது எப்படி?
வாட்ஸ்அப் மெசஞ்சர் தளத்தில் சாட்களை (Chats) லாக் செய்யும் ‘லாக் சாட்’ (Lock Chat) அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மெசஞ்சர் தளத்தில் சாட்களை (Chats) லாக் செய்யும் ‘லாக் சாட்’ (Lock Chat) அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு குறித்து பார்ப்போம்.
உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மெசெஞ்சர் ஆப் ஆக வாட்ஸ்அப் உள்ளது. சாட்டிங் மட்டுமின்றி போட்டோஸ், வீடியோ, டாக்குமென்ட், ஆடியோ, வீடியோ - ஆடியோ கால், குரூப் சாட் போன்ற பல பயனுள்ள விஷயங்கள் இருப்பதால் வாட்ஸ்அப் பயன்பாடு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதேபோல் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவும் அதன் பயனர்களை திருப்திபடுத்துவதற்காக விதவிதமான அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு விஷயத்தில் வாட்ஸ்அப் மிகவும் கவனமாக உள்ளது.
அதாவது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன், என்க்ரிப்ட் செய்யப்பட்ட என்க்ரிப்டேடு சாட் பேக்அப், டிஸ்அப்பிரிங் மெசேஜ், ஸ்கிரீன்ஷாட் தடுப்பது மற்றும் ஸ்டேட்டஸை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்துவது என பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது “சாட் லாக்” என்ற புது அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் நியூ அப்டேட்:
பாஸ்வேட் அல்லது பயோமெட்ரிக்கை வைத்து குறிப்பிட்ட சாட்களை லாக் செய்து கொள்ளும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவேதான் ஆண்ட்ராய் மற்றும் ஐபோன் சாதனங்களில் பாஸ்வேர்ட் அல்லது பயோமெட்ரிக்ஸைக் கொண்டு ஒட்டுமொத்த வாட்ஸ்அப்பையும் லாக் செய்யும் அம்சம் இருக்கிறதே... இது என்ன பிரமாதம் என நீங்கள் நினைக்கலாம்.
இந்தப் புதிய அப்டேட் மூலம் தனிப்பட்ட மற்றும் குரூப்-களில் உள்ள மிக முக்கியமான சாட்களை பயனர்கள் லாக் செய்து கொள்ளலாம். இவை லாக்டு சாட் பட்டியலில் இணைக்கப்பட்டதும், அதனை அதற்கான ஸ்கிரீனில் இருந்து மட்டுமே இயக்க முடியும். இதனை திறக்க பயனரின் கைரேகை அல்லது பாஸ்வேர்டு தேவை. ஒருவேளை அப்டேட் செய்யப்பட்ட உங்கள் செல்போனை எடுத்து யாராவது குறிப்பிட்ட சாட்களை பார்க்க நினைத்தால், அவர்களால் அதனைப் பார்க்க முடியாது. இதன் மூலமாக தனிமனிதர்களின் சுதந்திரம் காக்கப்படுகிறது.
லாக் சாட்டை அப்டேட் செய்வது எப்படி?
- ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களில் உள்ள வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யவும்.
- லாக் செய்ய விரும்பும் குறிப்பிட்ட சாட்டை தேர்வு செய்யவும்.
- அந்த சாட்டின் Profile-ஐ கிளிக் செய்து, கீழே ஸ்க்ரோல் செய்து, "சாட் லாக் (Chat Lock)" என்பதை க்ளிக் செய்யவும்.
- இப்போது உங்களுடைய கைரேகை (Biometrics) அல்லது கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி லாக் சாட் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்யலாம்.
இந்த லாக் செய்யப்பட்ட சாட்டை அடுத்த முறை ஓபன் செய்ய வேண்டுமென்றால், Locked Chats பட்டியலினை க்ளிக் செய்து, அங்கு பயனர் தனது கைரேகை அல்லது பாஸ்வேர்ட்டை பதிவிட வேண்டும்.