சாதாரணமானவரை அசாதாரண திறமை மிக்கவராக மாற்றும் 10 பழக்கங்கள்!
கொஞ்சம் கட்டமைப்பு, சுய விழிப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்புடன் சாதாரண மனிதர்களும் விதிவிலக்கானவர்களாக மாற முடியும் என்பது உணர்த்தும் 10 பழக்க வழக்கங்கள்.
அசாதாரண செயல்திறன் கொண்டவர்கள் வித்தியாசமாக கட்டமைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் ஒருவித அசாதாரணமான ஒழுக்கம், கவனம் அல்லது திறமையுடன் பிறக்கிறார்கள் என்று நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர்களில் பெரும்பானாரோ நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தொடங்கியவர்கள். முடிவுகளை எடுக்க அதிகம் யோசித்தல், ‘நாளை தொடங்கலாம்’ போன்ற சுழற்சிகளில் சிக்கியவர்கள்.
ஆனால், வித்தியாசம் என்ன? அவர்கள் அதற்கான ஊக்கம் கிடைக்கும் வரை காத்திருக்கவில்லை. சிறிய பழக்கங்களை வளர்த்துக் கொண்டனர். “நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை...” என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருந்தால், அதை உடனே நிறுத்துங்கள். அசாதாரண முடிவுகளைப் பெற சாதாரணமானவர்கள் பயன்படுத்தும் 10 பழக்கங்களை இங்கே பார்க்கலாம்.

1. அமைப்புகளை நம்புதல்
உயர் செயல்திறன் கொண்டவர்கள் எப்போதும் அதை உணர்வதில்லை. ஆனால், அவர்கள் முடிவுகளை எடுக்க மனநிலை மாற்றங்களை நம்பி இருப்பதும் இல்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தினமும் காலையில் எழுதுவது தேவையற்ற செயல்களில் ஈடுபடும் நேரத்தை தடுப்பது போன்ற தானாக நடக்கும் விஷயங்களை செய்கிறார்கள். அமைப்புகள் என்பது இங்கே மன உறுதியைக் குறிக்கிறது.
2. ‘ஆம்’ என்று சொல்வதை விட அதிகமாக ‘இல்லை’ என்பர்
பெரும்பாலான மக்கள் எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதில் மும்முரமாக இருந்தாலும், உயர் செயல்திறன் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
‘இல்லை’ என்று சொல்வது நிராகரிப்பு அல்ல; அது பாதுகாப்பு என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
அவர்களின் கவனத்தை நீர்த்துப்போகச் செய்யும் கவனச் சிதறல்களில் இருந்து அவர்களின் நேரம், ஆற்றல் மற்றும் மன இடத்தைப் பாதுகாக்கிறார்கள்.
3. ஓய்வே ஓர் உத்திதான்
உயர்திறன் கொண்ட ஒருவருக்கு தூக்கம் என்பது ஓர் ஆடம்பரமல்ல. அது திட்டத்தின் ஒரு பகுதி. சாதாரண மனிதர்களாக இருந்து உயர்ந்தவர்கள் மீட்சியை மதிக்கிறார்கள். அவர்கள் குற்ற உணர்ச்சியின்றி ஓய்வெடுக்கின்றனர். தங்கள் தூக்க சுழற்சிகளைப் பாதுகாக்கிறார்கள். ஏனெனில், தொடர்ந்து வேலை செய்வதால் யாருக்கும் பயன் இல்லை.

4. விஞ்ஞானிகளைப் போல சிந்தித்தல்
குறைபாடற்ற முடிவுகளைப் பற்றியே கவலைப்படுவதற்குப் பதிலாக, உயர் செயல்திறன் கொண்டவர்கள் சோதித்துப் பார்க்கிறார்கள், சரிசெய்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் தோல்விகளைத் தரவுகளைப் போல நடத்துகிறார்கள். அது தோல்வியடைந்த காலை வழக்கமாக இருந்தாலும் கூட, அதை அவர்கள் மீண்டும் மீண்டும் செய்கின்றனர். மாறாக, அதுபற்றி ஆழ்ந்த கவலை கொள்வதில்லை.
5. கவனத்தை பயிற்றுவித்தல்
நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் விளம்பரங்கள் நிறைந்த உலகில், கவனம் என்பது மதிப்புமிக்கது ஆகும். உயர் செயல்திறன் கொண்டவர்கள் தீவிரமாக கவனத்தை உருவாக்குகிறார்கள். அது ஆழ்ந்த வேலை, சிங்கிள் டாஸ்கிங் ஆகியவற்றை பற்றியதாக இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, கவனம் என்பது இயற்கையானது அல்ல, அது மெல்ல வளர்க்கப்படுவது.
6. சலிப்பை சுவாரஸ்யமாக மாற்றுதல்
உடற்பயிற்சி, சரிபார்ப்புப் பட்டியலை எழுதுதல் அல்லது உங்கள் நாளைத் திட்டமிடுதல் ஆகியவை ஆச்சரியமானவை அல்ல. ஆனால் உயர் செயல்திறன் கொண்டவர்கள் சாதாரண வாழ்க்கையில் திருப்தி அடைகிறார்கள். அவர்கள் தினசரி ஒழுக்கத்தை ஒரு சுமையாக அல்ல, மாறாக ஒரு சலுகையாகப் பார்க்கிறார்கள்.
7. எதிர்வினையாற்றும் முன்பு சிந்தித்தல்
உணர்வுப் புயலில் சிக்கிக் கொள்வதற்குப் பதிலாக, உயர் செயல்திறன் கொண்டவர்கள் இடைநிறுத்தம் செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். எதிர்வினையாற்றுவதற்கு முன்பு அவர்கள் நாட்குறிப்பில் எழுதுகிறார்கள், தியானிக்கிறார்கள் அல்லது “இது பயனுள்ளதா?” என்று தங்களுக்குள் கேட்கிறார்கள். அந்தச் சிறிய பிரதிபலிப்புத் தருணமே பெரும்பாலும் குழப்பத்திற்கும் தெளிவுக்கும் இடையிலான வித்தியாசமாகும்.

8. நிறைவு செய்யும் கலையில் தேர்ச்சி
விஷயங்களைத் தொடங்குவது எளிது. ஆனால் முடிப்பது கடினம். உயர் செயல்திறன் கொண்டவர்கள் நிறைவுக்கான ஒரு சார்பை உருவாக்குகிறார்கள். நிறைவு என்பது கச்சிதத்தை விட சிறந்தது.
9. பொறுப்புணர்வு சூழ வைத்துக் கொள்ளுதல்
வெற்றி என்பது தனிமையில் சாத்தியமாகாது என்பதை அவர்கள் அறிவார்கள். உயர் செயல்திறன் கொண்டவர்கள், தங்களை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் வழிகாட்டிகள், சகாக்கள் மற்றும் பயிற்சியாளர்களின் வட்டங்களை உருவாக்குகிறார்கள். அவர்களால் அதை தனியாக செய்ய முடியாது. உங்களாலும்தான்.
10. அடையாளத்தில் முதலீடு செய்தல்
“நான் 5 கிலோ எடையைக் குறைக்க விரும்புகிறேன்” போன்ற விளைவுகளைத் துரத்துவதற்குப் பதிலாக, “நான் தினமும் உடற்பயிற்சி செய்யும் நபர்” என்ற அடையாளத்தில் அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள்.
இந்த நுட்பமான மாற்றம் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை மாற்றியமைக்கிறது. இது அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் வழக்கங்களில் அவர்கள் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதை மாற்ற உதவுகிறது. இது நீடித்த பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கிறது.
ஒரு சிறந்த வீரராக இருக்க, நீங்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்கவோ, மாரத்தான்களில் ஓடவோ, வருடத்துக்கு 50 புத்தகங்களைப் படிக்கவோ தேவையில்லை. சிறிய விஷயங்களை, தொடர்ந்து செய்ய வேண்டும், பாராட்டுகளை எதிர்பார்க்காமல்.
மிக முக்கியமாக, ஒரு விஷயத்தை தொடங்குவதற்கு நீங்கள் அசாதாரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் கட்டமைப்பு, சுய விழிப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்புடன் சாதாரண மனிதர்களும் விதிவிலக்கானவர்களாக மாற முடியும் என்பதற்கு இந்தப் பழக்கவழக்கங்கள் சான்றாகும். அது நீங்களாகவும் இருக்கலாம்.
மூலம்: ஆஸ்மா கான்
Edited by Induja Raghunathan

