2022 உலகக்கோப்பையில் அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் - போர்ஃப்ஸ் பட்டியல்!
2022-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களை போர்ஃப்ஸ் பட்டியலிட்டுள்ளது.
2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்றது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
பிரான்சு, அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில், 2022ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களை போர்ஃப்ஸ் பட்டியலிட்டுள்ளது.
அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள்
போர்ஃப்ஸ் பட்டியலின்படி கீழ்கண்ட விளையாட்டு வீரர்கள் அதிக வருமானம் ஈட்டுவோர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
- கிலியன் எம்பாப்பே – பிரான்சு
- லியோனல் மெஸ்சி – அர்ஜென்டினா
- கிரிஸ்டியானோ ரொனால்டோ – போர்ச்சுகல்
- நெய்மார் – பிரேசில்
- ராபர்ட் லெவன்டோஸ்கி – போலாந்து

கிலியன் எம்பாப்பே
உலகளவில் கால்பந்து போட்டியில் அதிக வருமானம் ஈட்டும் நபர் பிரான்சு நாட்டைச் சேர்ந்த கிலியன் எம்பாப்பே. உலகக்கோப்பை போட்டி என்பது கிலியன் எம்பாப்பேவிற்கு புதிதல்ல. 2018-ம் ஆண்டு நடந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக பிரான்சு வெல்வதற்கு எம்பாப்பே உதவியிருக்கிறார். அப்போது அவருக்கு 19 வயது.
EA Sports உடனான எம்பாப்பே-யின் கூட்டணி உலக அரங்கில் முக்கிய அம்சமாகும். நைக்கி உடனான காலணி டீலும் இதில் முக்கியமாகும்.
“உலக அரங்கில் எம்பாப்பே திறமையான வீரர். EA Sports மற்றும் FIFA 23 வீடியோ கேமின் கவர் வீரரான அவர், உலகக்கோப்பையை பிரான்சு கைப்பற்றினால், அவரே ஃபிஃபா உலகக்கோப்பையின் முகமாக திகழ்வார். அதோடு, எம்பாப்பேவின் ஸ்பான்சர் டீல்களும் அதிகரித்து புகழின் உச்சியைத் தொடுவார்,” என்று XtraTimeFC என்கிற ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் உரிமையாளர் ரோசி பிடில்.
2018ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் பார்வையாளர்கள் சராசரியாக 191 மில்லியன் பேர். இதனால் பிராண்டுகளின் மொத்த கவனமும் உலகக்கோப்பையின் பக்கம் திரும்பியதாகவும் ஸ்பான்சர்ஷிப் அதிகரித்திருப்பதாகவும் பிடில் குறிப்பிட்டுள்ளார்.

லியோனல் மெஸ்சி
ஏற்கெனவே அதிக வருமானம் ஈட்டி வரும் வெற்றிகரமான விளையாட்டு வீரரான எம்பாப்பே 2022-23 ஆண்டில் 128 மில்லியன் டாலர் ஈட்டுவார் என எதிர்பார்க்கப்படுவதாக போர்ஃப்ஸ் மதிப்பிடுகிறது.
பாரீஸ் செயிண்ட்-ஜெர்மைன் ஒப்பந்தம் மூன்றாண்டு காலம் நீட்டிக்கப்பட்டதன் காரணமாக அவருக்கு 110 மில்லியன் டாலர் கிடைக்கும் என துறைசார் நிபுணர்கள் கணிக்கின்றனர். இவைதவிர, Nike, Dior, Hublot, Oakley, Panini, EA Sports, Sorare போன்ற பிரபல பிராண்டுகளின் டீல் மூலம் ஆண்டிற்கு 18 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது.

கிரிஸ்டியானோ ரொனால்டோ
எம்பாப்பே இரண்டாவது முறையாக உலகக்கோப்பை போட்டியில் விளையாடுகிறார். இந்நிலையில், 2022-ம் ஆண்டு உலகக்கோப்பை தான் பங்கேற்கும் இறுதி போட்டி என அறிவித்துள்ள அர்ஜென்டினாவைச் சேர்ந்த 35 வயது லியோனல் மெஸ்சி, போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 38 வயது கிரிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரும் புகழின் உச்சத்தை எட்ட முற்பட்டு வருகின்றனர்.
இவர்கள் இருவருமே உலகக்கோப்பை போட்டியில் அதிக வருமானம் ஈட்டும் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே 1 மில்லியனுக்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளனர்.

நெய்மர்
இந்த சீசனில் மெஸ்சி 120 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவார் எனவும் ரொனால்டோ 100 மில்லியன் டாலர் ஈட்டுவார் எனவும் கணிக்கப்படுகிறது.
மேலும், கத்தாரில் நடைபெற்ற 2022 உலகக்கோப்பையில் பங்கேற்ற வீரர்களான பிரேசில் நாட்டைச் சேர்ந்த நெய்மார் மற்றும் போலாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் லெவன்டோஸ்கி ஆகியோர் அதிக வருமானம் ஈட்டியுள்ளனர்.

ராபர்ட் லெவன்டோஸ்கி
நெய்மாருக்கு 30 வயதுதான் ஆகிறது என்றாலும் 2022 உலகக்கோப்பை தான் பங்கேற்கும் இறுதிப் போட்டியாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
34 வயதான லெவண்டோஸ்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் FC Barcelona கிளப்பில் இணைந்ததன் மூலம் சுமார் 45 மில்லியன் டாலர் ஈட்டியுள்ளார். இந்த சீசனில் 35 மில்லியன் டாலரும் விளையாட்டு சார்ந்த மற்ற நடவடிக்கைகள் மூலம் 8 மில்லியன் டாலரும் வருமானம் ஈட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 உலகக்கோப்பை போட்டியில் அதிக வருமானம் ஈட்டும் இந்த ஐந்து வீரர்களின் ஒட்டுமொத்த வருமானம் 452 மில்லியன் டாலராக இருக்கும் எனவும் இதர நடவடிக்கைகள் மூலம் 173 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டுவார்கள் எனவும் போர்ஃப்ஸ் மதிப்பிடுகிறது.
தோட்டக்காரரின் மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் பிரபல கால்பந்து சூப்பர் ஸ்டார் ஆன கதை!

