தமிழகத்தில் அமைய உள்ள ஓலா ஹப்பில் 25,000 பேருக்கு வேலை - உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பாவிஷ் அகர்வால்!
சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024 இல் பேசிய Ola Electric இன் இணை நிறுவனர் மற்றும் CEO பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டில் தொடங்கவுள்ள புதிய வாகன மையம் அடுத்த மாதம் முதல் செயல்படவுள்ளதாக அறிவித்தார்.
சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024 இல் பேசிய இன் இணை நிறுவனர் மற்றும் CEO பாவிஷ் அகர்வால், தமிழ்நாட்டில் தொடங்கவுள்ள புதிய வாகன மையம் அடுத்த மாதம் முதல் செயல்படவுள்ளதாக அறிவித்தார்.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விரைவில் அமையவுள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் வாகன மையம் செயல்பட தொடங்கியதும், 25,000 பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இணை நிறுவனரும், சிஇஓவுமான பாவிஷ் அகர்வால் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள புதிய EV ஹப் உற்பத்தி திறன் தவிர விற்பனையாளர் மற்றும் சப்ளையர் நெட்வொர்க்கையும் கொண்டிருக்கும் என்றும், வாகன மையம் செயல்படத் தொடங்கியதும், 25,000 பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜூன் 2023 இல், Ola Electric தமிழ்நாட்டில் EV மையத்தை நிறுவும் திட்டத்தை வெளிப்படுத்தியது, இதில் மின்சார வாகன உற்பத்திக்கான Ola Future Factory மற்றும் சப்ளையர்களுடன் ஒரு ஜிகாபேக்டரி ஆகியவை அடங்கும்.
“எங்கள் ஃபியூச்சர் ஃபேக்டரி என்று அழைக்கப்படும் இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிலையங்களில் ஒன்றை, வெறும் எட்டு மாதங்களில் தமிழ்நாட்டில் அமைக்க முடிந்தது. இது 100 GwH முழு அளவிலான திறன் கொண்ட இந்தியாவின் முதல் கிகா ஃபாக்டரியாக இருக்கும் மற்றும் எங்கள் இரு சக்கர வாகன உற்பத்தி திறன் ஒரு வருடத்திற்கு 10 மில்லியன் யூனிட்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,”
கடந்த மாதம், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸை (டிஆர்ஹெச்பி) செபியிடம் சமர்ப்பித்தது. வரவிருக்கும் ஐபிஓ ரூ.5,500 கோடி மதிப்பிலான பங்குகளின் புதிய வெளியீடு மற்றும் 95.2 மில்லியன் ஈக்விட்டி பங்குகளை விற்பனை செய்வதற்கான சலுகை ஆகியவற்றைக் சமர்ப்பித்துள்ளது.

