20+ வயதினருக்கு பணத்தைப் பெருக்க பக்காவான 5 வியூகங்கள்!
நீங்கள் 20+ வயதில் உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதுதான் அடுத்த 20 ஆண்டுகளுக்கான பாதையை அமைக்கிறது.
20-களின் நடுப்பகுதி என்பது ஒரு வித்தியாசமான இடைநிலை. நீங்கள் இனி ஒரு டீன் அல்ல. அதேநேரம் முழுமையாக பக்குவம் அடைந்த இளைஞராகவும் நீங்கள் உணரமாட்டீர்கள்.
நீங்கள் வேலை செய்யத் தொடங்கிவிட்டீர்கள் (அல்லது செல்லப் போகிறீர்கள்), ஒருவேளை ஒரு புதிய நகரத்திற்குச் சென்றிருக்கலாம்; பணமும் சம்பாதிக்க தொடங்கிவிட்டீர்கள். ஆனால், அந்த சுதந்திரத்துக்கு ஒரு விலையும் வருகிறது: பில்கள், வாடகை, இஎம்ஐ, வாழ்க்கை முறை சோதனைகள் மற்றும் அனைத்தையும் தெரிந்துகொள்வதற்கான தொடர் அழுத்தம்.
பணத்தை எவ்வாறு நிர்வகிப்பது அல்லது அதிகரிப்பது என்பதை யாரும் கற்பிக்காததால் பல 20+ வயதினர் பொருளாதாரம் குறித்து அதிகம் அச்சமடைகின்றனர். கடன்கள், முதலீடு அல்லது வரி சேமிப்பு போன்றவை பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை. எனவே, நாம் பெரும்பாலும் அனைத்தையும் பயிற்சி மற்றும் தவறுகள் மூலமே கற்றுக்கொள்கிறோம். ஆனால், உண்மை இதுதான்:
நீங்கள் 20+ வயதில் உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதுதான் அடுத்த 20 ஆண்டுகளுக்கான பாதையை அமைக்கிறது.
நீங்கள் மாதம் ரூ.20,000 சம்பாதித்தாலும் சரி, ரூ.2,00,000 சம்பாதித்தாலும் சரி, இந்த 5 நடைமுறைகள் உங்கள் பணத்தை நம்பிக்கையுடன் அதிகரிக்க உதவும். அவை:

படம்: மெட்டா ஏஐ
1. ஆரம்பத்திலேயே முதலீடு செய்யத் தொடங்குங்கள்
“பல ஆண்டுகளுக்கு முன்பு எவரோ நட்ட ஒரு மரத்தால்தான் இன்று யாரோ ஒருவர் நிழலில் அமர முடிகிறது” - வாரன் பஃபெட்
முதலீடு செய்யத் தொடங்க ‘அதிக பணம்’ கிடைக்கும் வரை காத்திருப்பது 20+ வயதில் மக்கள் செய்யும் மிகப் பெரிய தவறுகளில் ஒன்றாகும். உண்மையில், பணத்தை விட நேரம்தான் மிகவும் சக்தி வாய்ந்தது. புத்திசாலித்தனமாக முதலீடு செய்யப்படும் மாதம் ரூ.500 கூட 10 ஆண்டுகளில் லட்சங்களாக மாறக் கூடும்.
என்ன செய்யலாம்? - மாதம் ரூ.500 மட்டுமே செலுத்தி மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி திட்டத்தை தொடங்குங்கள். இடிஎஃப்-களை முயற்சி செய்யலாம். முதலீட்டுக்கான வழிகளை எளிதாக அறிய Zerodha Coin, Groww அல்லது Kuvera போன்ற செயலிகளை பயன்படுத்தலாம்.
2. முதலில் ஓர் அவசர நிதியை உருவாக்குங்கள்
“எதுவும் உறுதி இல்லை என்பதே உறுதியான ஒரு விஷயம்” - பிளினி தி எல்டர்
வாழ்க்கை பல திடீர் சவால்களை கொண்டிருக்கிறது. மருத்துவக் கட்டணங்கள், வேலை இழப்பு அல்லது வாடகை பாக்கி போன்றவை உதாரணம். அதனால்தான் நமக்கு அவசர நிதி தேவைப்படுகிறது.
3-6 மாத அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகளுக்கான தொகையை ஒரு தனி வங்கிக் கணக்கு அல்லது லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் சேமிக்கவும். இந்த நிதி அவசர காலங்களுக்கு மட்டுமே என்பதை மனதில் நிறுத்தவும்.
ஒவ்வொரு மாதமும் அதிக வட்டி சேமிப்புக் கணக்குக்கு ஒரு நிலையான தொகையை தானியங்கி பரிமாற்றத்தை (Automatic Transfer) அமைக்கவும்.

3. வாழ்க்கை முறை செலவினத்தை குறைப்பீர்!
“பலர் தான் சம்பாதிக்காத பணத்தை, தங்களுக்குப் பிடிக்காத பொருட்களை வாங்குவதற்கும், தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கவருவதற்கும் செலவிடுகிறார்கள்” - வில் ரோஜர்ஸ்
வருமானம் அதிகரிக்கும்போது, ‘அந்தஸ்தை உயர்த்த வேண்டும்’ என்ற ஆசையும் அதிகரிக்கிறது. ஒரு நல்ல செல்போன், அதிகம் வெளியில் செல்வது, அதிக சுற்றுலாக்கள். அதுதான் வாழ்க்கை முறை பணவீக்கம். அது நம்மை சிக்கவைக்க காத்திருக்கும் ஒரு பொறி.
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை அனுபவிப்பது தவறல்ல. ஆனால், உங்கள் செலவுகளையும் உங்கள் வருமானம் அளவுக்கு வேகமாக உயர விடாதீர்கள்.
50-30-20 விதியைப் பின்பற்றுங்கள்: அதாவது 50% தேவைகள், 30% விருப்பங்கள், 20% சேமிப்பு/முதலீடு.
உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கு முன், சம்பள உயர்வுகள் அல்லது போனஸ்களை சேமிப்பிற்கு திருப்பி விடுங்கள்.
4. வரி சேமிப்பின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்
“நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, ஆனால் நீங்கள் எவ்வளவு வைத்திருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.”
உங்கள் 20-களில், வரி விலக்குகள் உங்கள் ரகசிய ஆயுதமாக இருக்கலாம். உங்கள் வரிச்சுமையை சட்டப்பூர்வமாகக் குறைப்பது எப்படி என்பதை நீங்கள் விரைவில் கற்றுக்கொண்டால், நீங்கள் அதிக பணத்தை சேமித்து வளர்வீர்கள். வரிவிலக்குகள், வரிச் சலுகைகளைப் பெறும் நடைமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்.
5. பல வருமான வழிகளை உருவாக்குங்கள்
“ஒரு வருமானத்தை மட்டும் நம்பி இருக்காதீர்கள். இரண்டாவது வருமான ஆதாரத்தை உருவாக்க முதலீடு செய்யுங்கள்” - வாரன் பஃபெட்
20+ வயதுதான் துணை வேலைகள், ஃப்ரீலான்சிங் அல்லது பணமாக்குதல் திறன்களை முயற்சி செய்ய சிறந்த காலக்கட்டம். ஏனெனில் இப்போதுதான் உங்களிடம் அதிக ஆற்றல், குறைவான பொறுப்புகள் இருக்கக் கூடும்.

படம்: மெட்டா ஏஐ
உங்கள் துறையில் - வடிவமைப்பு, எழுத்து, மார்க்கெட்டிங் என எதுவாக இருந்தாலும் அதில் ஃப்ரீலான்ஸராக இருங்கள். Gumroad அல்லது Etsy போன்ற தளங்களை பயன்படுத்தலாம்.
எதிர்காலத்தில் வருமான தரக்கூடிய கன்டென்ட்டை உருவாக்கக் கூடிய உருவாக்க ஒரு வலைப்பதிவு, யூடியூப் சேனல் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கலாம்.
உங்கள் 20-களின் நடுப்பகுதி என்பது உங்கள் பொருளாதார அடித்தளத்துக்கான ஆண்டுகள். நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், இந்த 5 விஷயங்களைச் செய்வது உங்கள் 30-களில் நீங்கள் கூடுதலாக ஓடுவதை தவிர்க்க உதவும்.
பணம் ஒரே இரவில் சம்பாதிக்கக் கூடிய ஒன்றைல்ல. ஆனால் நேரம், நிலைத்தன்மை மற்றும் புத்திசாலித்தனமான பழக்க வழக்கங்களுடன், உங்கள் பணமும் உங்களுடன் வளரும்.
Edited by Induja Raghunathan

