கோவையில் ஆகஸ்ட் 4 AIC RAISE நடத்தும் 'GENESIS' அடுத்த தலைமுறை ஸ்டார்ட்-அப் மாநாடு!
மாநாட்டில் முக்கிய உரைகள், ஸ்டார்ட்அப் கலந்துரையாடல்கள், செயற்கை நுண்ணறிவு (AI), ஆழ்தொழில்நுட்பம், மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான அமர்வுகள், தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் முதலீட்டு பிச்சிங் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) மெய்ட்டி ஸ்டார்ட்-அப் ஹப் (MSH) செயல்படுத்தும் GENESIS (Gen-Next Support for Innovative Startups) திட்டத்தின் கீழ், GENESIS NextGen Startup Summit – கோவை, ஆகஸ்ட் 4, 2026 அன்று கோவையில் உள்ள ரத்தினம் கிராண்ட் ஹாலில் நடைபெறுகிறது.
AIC RAISE அமைப்புடன் இணைந்து நடைபெறும் இந்த மாநாட்டில், கொள்கை வகுப்பாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், இன்குபேட்டர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர்.
இரண்டாம் அடுக்கு மூன்றாம் அடுக்கு நகரங்களில் தொழில்நுட்பத் தொழில்முனைவோரை ஊக்குவித்து, ஆழ்தொழில்நுட்ப (DeepTech) புதுமைகளை மேம்படுத்துவதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
மாநாட்டில் முக்கிய உரைகள், ஸ்டார்ட்அப் கலந்துரையாடல்கள், செயற்கை நுண்ணறிவு (AI), ஆழ்தொழில்நுட்பம், மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான அமர்வுகள், தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் முதலீட்டு பிச்சிங் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக GENESIS Entrepreneur-in-Residence (EIR) 3.0 திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் தொழில்நுட்ப யோசனைகளை உருவாக்கும் தொடக்கநிலை புதுமையாளர்களுக்கு ₹10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
ரூ.490 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படும் GENESIS திட்டம், நாடு முழுவதும் 65 இன்குபேட்டர்கள் மூலம் இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் ஸ்டார்ட்அப் சூழலை வலுப்படுத்தி வருகிறது.
இதுவரை 579 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரவு பெற்றுள்ளன. இன்குபேஷன், வழிகாட்டுதல், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில்துறை இணைப்புகள் மூலம் பிராந்திய தொழில்முனைவோரை வளர்ப்பதில் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்தியாவின் புதுமைத் தொழில் வளர்ச்சி பெருநகரங்களைத் தாண்டி அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், பிராந்திய திறமைகளை தேசிய மற்றும் உலகளாவிய வாய்ப்புகளுடன் இணைக்கும் முயற்சியாக இந்த மாநாடு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் ஊடக பார்ட்னராக யுவர்ஸ்டோரி தமிழ் உள்ளது.
ஆகஸ்ட் 4, 2026 கோவை ரத்தினம் கிராண்ட் ஹாலில் நடைபெறும் மாநாட்டில் பங்குபெற:

