ரூ.1,275 கோடி நிதியுடன் Grand Anicut Fund IV-ஐ நிறைவு செய்தது முன்னணி முதலீடு நிறுவனம் Anicut Capital
இந்தியாவின் முன்னணி பல சொத்து முதலீடு நிறுவனம் ‘அனிகட் கேபிடல்’ தனது மூன்றாவது தனியார் கிரெடிட் நிதி கிராண்ட் அனிகட் ஃபண்டு IV (“GAF-IV”) நிறைவு அடைந்திருப்பதை அறிவித்துள்ளது. இந்த நிதி அதன் துவக்க இலக்கான ரூ.1,000 கோடியை கடந்து ரூ.1,275 கோடியை திரட்டியுள்ளது.
இந்தியாவின் முன்னணி பல சொத்து முதலீடு நிறுவனம் ‘அனிகட் கேபிடல்’ (Anicut capital) தனது மூன்றாவது தனியார் கிரெடிட் நிதி 'கிராண்ட் அனிகட் ஃபண்டு IV' (Grand Anicut Fund-IV) நிறைவு அடைந்திருப்பதை அறிவித்துள்ளது. இந்த நிதி அதன் துவக்க இலக்கான ரூ.1,000 கோடியை கடந்து ரூ.1,275 கோடியை திரட்டியுள்ளது.
இந்த நிதி கிப்ட் சிட்டியைச் சார்ந்த டாலர் ஃபீடரை (dollar feeder) கொண்டிருப்பது சர்வதேச முதலீட்டாளர்கள் இந்திய தனியார் கடன் வாய்ப்பில் பங்கேற்க வழி செய்கிறது. நுகர்வோர், பொறியியல் சேவைகள், சாஸ், உற்பத்தி, விருந்தோம்பல் மற்றும் கப்பல் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் அனிகட் கேபிடல், பரிவர்த்தனை ஒன்றுக்கு சராசரியாக ரூ.80 கோடி காசோலை கொண்டுள்ளது.

தற்போது GAF-IV நிதி நிறைவு மூலம் நிறுவனம் கடன் மற்றும் சமபங்கில் நிறுவனம் நிர்வகிக்கும் சொத்துக்களின் மதிப்பு ரூ.4,500 கோடியை கடந்துள்ளது.
”குறுகிய கால மதிப்பீடுகள் அல்லாமல், உறுதியான செயல்பாடு, வர்த்தகத்திற்கு மீண்டும் ரொக்கம் வரும் வகையில் மறுமுதலீடு செய்பவர்கள், சுழற்சியை எதிர்கொண்டவர்கள் ஆகிய நம்பகமான ப்ரமோட்டர்களையே நாடுகிறோம்,” என அனிகட் கேபிடல் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக பார்ட்னர் பாலமுருகன் கூறியுள்ளார்.
ரொக்க வரத்து தரம், வர்த்தக நிர்வாகம், தெளிவான வெளியேறுதல் வழி, ஆகிய அம்சங்களில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
Edited by Induja Raghunathan

