Alternative Investment Fund - தொடக்க நிறுவனங்களுக்கான முதலீட்டை வழங்க Anicut Capital - தி சென்னை ஏஞ்சல்ஸ் கூட்டு திட்டம்!
மாற்று சொத்து நிர்வாக நிறுவனம் அனிகட் கேபிடல் மற்றும் இந்தியாவின் தீவிரமான ஏஞ்சல் முதலீடு வலைப்பின்னல்களில் ஒன்றான ‘தி சென்னை ஏஞ்சல்ஸ்’ இணைந்து, ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப் முதலீட்டை வலுவாக்குவதற்கான கூட்டு முயற்சியை அறிவித்துள்ளன.
மாற்று சொத்து நிர்வாக நிறுவனம் 'அனிகட் கேபிடல்' மற்றும் இந்தியாவின் தீவிரமான ஏஞ்சல் முதலீடு வலைப்பின்னல்களில் ஒன்றான தி சென்னை ஏஞ்சல்ஸ் ஆகிய நிறுவனங்கள், ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப் முதலீட்டை வலுவாக்குவதற்கான கூட்டு முயற்சியை அறிவித்துள்ளன. ’மாற்று முதலீடு நிதி (Alternative Investment Fund) Cat 1’ அமைப்பு மூலம் இதை நிறைவேற்ற இருப்பதாக தெரிவித்துள்ளன.
இந்த கூட்டு முயற்சி இந்தியாவில் ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்’களில் சமபங்கு முதலீட்டை ஆழமாக்கும் நோக்கம் கொண்டது. முறையான, நிறுவன அளவிலான முதலீடு ஆதரவு மூலம் மேலும் துடிப்பான ஸ்டார்ட் அப் சூழலை உருவாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

அஜய் ஆனந்த்
இந்த கூட்டு முயற்சி கீழ், முதலீட்டிற்கான தகுதியை பூர்த்தி செய்யும் ஸ்டார்ட் அப்’கள் மாற்று முதலீடு நிதி AIF, மூலம் நிதி திரட்டும் வாய்ப்பை பெறும். ஸ்டார்ட் அப் முதலீடு தொகுப்பில் ஒற்றை முதலீட்டாளராக பிரதிபலிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. இது சமபங்கு நிர்வாகத்தை எளிதாக்கி, நிதி திரட்டும் செயல்திறனையும் அதிகரிக்கும்.
அனிகட் கேபிடல் தற்போது ரூ.4,500 கோடிக்கும் மேலான முதலீடுகளை தனதி நிதிகள் மூலம் நிர்வகித்து வருகிறது. பல்வேறு பிரிவுகளின் கீழ் வரும் மூன்று கடன் நிதிகள், 4 சமபங்கு நிதிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
2007ல் துவக்கப்பட்ட தி சென்னை ஏஞ்சல்ஸ் , இந்தியாவின் முன்னணி ஏஞ்சல் முதலீடு வலைப்பின்னல்களில் ஒன்றாக இருக்கிறது. 150க்கும் மேலான முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து, 99க்கும் மேலான ஸ்டார்ட் அப்’களில் ரூ.200 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளது. இந்த கூட்டு முயற்சி, சென்னை ஏஞ்சல்சின் ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப் அணுகல் மற்றும் அனிகட் கேபிடலின் முதலீடு நிர்வாக அனுபவத்தை ஒன்றிணைக்கிறது.
"உற்பத்தி துறையில் சிறந்து விளங்குவதற்காக அறியப்படும் தமிழ்நாடு இப்போது மாநிலத்தில் உருவாக்கும் புதிய அலை பொருட்கள் சார்ந்த மற்றும் சாஸ் நிறுவனங்களின் ஆற்றலை பெற்றுள்ளது. இந்த பிரிவுகளில் தான் அனிகட் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது. இந்த கூட்டு முயற்சி மூலம் நிறுவனர்கள் முதலீட்டிற்கான அணுகலை பெறுவதோடு, இரண்டு நிறுவனங்களின் கூட்டு அனுபவம் மற்றும் வியூக பலன்களை பெறலாம்,” என அனிகட் கேபிடல் பார்ட்னர் அஜய் ஆனந்த் கூறியுள்ளார்.
”சென்னை ஏஞ்சல்சில் நாங்கள் எப்போதுமே, நிறுவனர்களை ஆதரிப்பது என்பது முதலீடு அளிப்பதையும் கடந்தது, என நம்புகிறோம். நிறுவனர்களை முதன்மையாக கருதும் நிறுவனம் என்ற முறையில் அனிகட் கேபிடல் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டார்ட் அப்களுக்கான மேலும் முறையான சீரான நிதி வழியை உண்டாக்குவதில் உற்சாகம் கொள்கிறோம்” என தி சென்னை ஏஞ்சல்ஸ் செயல் குழு தலைவர் கே.மகாலிங்கம் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan

