'பெங்களுரு; இந்தியாவின் ஸ்டார்ட்-அப் ஹப்' - ஹுருன்–IDFC ஃபர்ஸ்ட் பட்டியலில் முதலிடம்!
ஹுருன் பட்டியலின்படி, 200 தொழில்முனைவோர்களில், 88 ஸ்டார்ட்-அப் நிறுவன நிறுவனர்கள் பெங்களூருவை தங்கள் வசிப்பிடமாக கொண்டுள்ளனர்.
2025ஆம் ஆண்டுக்கான 'இந்தியாவின் மில்லேனியல் தலைமுறையைச் சேர்ந்த 200 சுயமாக உயர்ந்த தொழிலதிபர்கள்' பட்டியலில், பெங்களூரு இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் மையமாக தனது நிலையை தக்கவைத்துள்ளது. இந்த பட்டியலை IDFC FIRST Private மற்றும் Hurun India இணைந்து வெளியிட்டுள்ளன.
பட்டியலின்படி, 200 தொழில்முனைவோர்கள், 88 நிறுவனர் தொழில்முனைவோர்கள் பெங்களூருவை தங்கள் வசிப்பிடமாக கொண்டுள்ளனர். மேலும், 52 நிறுவனங்கள் பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகின்றன. இதனால், ‘இந்தியாவின் சிலிக்கான் வேலி’ என அழைக்கப்படும் பெங்களூரு, ஸ்டார்ட்அப் சூழலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மும்பை இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 41 நிறுவனங்கள் தலைமையகமாகவும், 83 தொழில்முனைவோர்கள் வசிப்பிடமாகவும் உள்ளனர். புதுடெல்லி வசிப்பிட நகரமாக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது; அங்கு 52 தொழில்முனைவோர்கள் வசிக்கின்றனர். நிறுவன தலைமையகங்களின் அடிப்படையில் குருகிராம் (36 நிறுவனங்கள்) குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.
பெங்களூருவை முன்னெடுக்கும் முக்கிய தொழில்முனைவோர்களில் நிகில் காமத் (Zerodha), ஹர்ஷ் ஜெயின் (Dream11), ஹர்ஷில் மாதூர் (Razorpay), ஸ்விக்கி நிறுவனர்களான ஸ்ரீஹர்ஷா மஜேட்டி மற்றும் நந்தன் ரெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பட்டியலில் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் உள்ள மற்ற நகரங்களில் சென்னை (11), புதுடெல்லி (10), ஹைதராபாத் (8), புனே (8), நொய்டா (7), அகமதாபாத் (5), ஜெய்ப்பூர் (4) மற்றும் கொல்கத்தா (4) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
முக்கிய தொழில்முனைவோர்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலில் குருகிராம் (32), சென்னை (15), புனே (13), ஹைதராபாத் (12), கொல்கத்தா (10), அகமதாபாத் (9) மற்றும் ஜெய்ப்பூர் (7) ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
மும்பையில், ராதாகிஷன் தமானி (DMart), அபய் சோய் (Max Healthcare), ஃபல்குனி நாயர் (Nykaa) ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.
புதுடெல்லியில், ராகுல் பாட்டியா (InterGlobe Enterprises), விஜய் சேகர் சர்மா (Paytm), DMI Finance நிறுவனர்கள் சிவாசிஷ் சாட்டர்ஜி, யுவராஜ் சிங், மற்றும் பேயூஷ் பன்சால் (Lenskart) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
குருகிராம், தீபிந்தர் கோயல் தலைமையிலான ‘Eternal’ நிறுவனத்தின் தலைமையகமாக உள்ளது. இந்த பட்டியல், இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழலில் பெங்களூருவின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

