உள்கட்டமைப்பு திட்டங்களை ஊக்குவிக்க NIIF நிதிக்கு ரூ.30,000 கோடி கூடுதல் முதலீட்டுக்கு கேபினட் ஒப்புதல்!
உள்கட்டமைப்பு மற்றும் இதர தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் அரசின் முதலீடு ஈடுபாட்டை ஆழமாக்கும் வகையில் மத்திய அமைச்சரவை புதிய மற்றும் எதிர்வரும் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதிக்கான நிதிகள் (NIIF) நிதிக்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.30,000 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
உள்கட்டமைப்பு மற்றும் இதர தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் அரசின் முதலீடு ஈடுபாட்டை ஆழமாக்கும் வகையில் மத்திய அமைச்சரவை புதிய மற்றும் எதிர்வரும் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதிக்கான நிதிகள் (என்.எஐ.ஐ.எப்) நிதிக்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.30,000 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இந்த முடிவை அடுத்து, என்.ஐ.ஐ.எப் நிதியில் அரசின் மொத்த முதலீடு ரூ.60,000 கோடியாக இருப்பதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
என்.ஐ.ஐ.எப் இந்தியாவின் இறையாண்மை சார்ந்த, தொழில்முறையாக நிர்வகிக்கப்படும் நிதியாக இருக்கிறது. தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் இதை நிர்வகிக்கிறது. இந்த நிதியில் அரசின் பங்கு 49 சதவீதமாக உள்ளது. நிதிகள் மற்றும் முதலீடு உத்திகளில் தற்போது ரூ.40,000 கோடி முதலீட்டை நிர்வகித்து வருகிறது.

முதலீடு செயலாக்கம் மற்றும் பலனில் சிறந்த செயல்பாட்டை இந்த நிதி வெளிப்படுத்தியுள்ளது. பெரிய அளவிலான வெளியேற்றம் வாயிலாக முதலீட்டாளர்களுக்கு ரூ.12,000 கோடி வரை கிடைத்துள்ளது.
இறையாண்மை சார்ந்த செல்வ நிதிகள், பென்ஷன் நிதிகள், முன்னணி உள்நாட்டு நிதி கழகங்கள் உள்ளிட்டவை மூலம் நிதி திரட்டியுள்ளது. அபுதாபி இன்வெஸ்ட்மண்ட் அத்தாரிட்டி, ஆஸ்ட்ரேலியன் சூப்பர், சிபிபி இன்வெஸ்ட்மண்ட்ஸ், ஆண்டாரியோ பென்ஷன் பிளான், பிஎஸ்பி இன்வெஸ்ட்மண்ட்ஸ், டீம்சிக், ஆசியன் இன்பிராஸ்டக்சர் இன்வெஸ்ட்மண்ட் வங்கி, நியூ டெவலப்மண்ட் வங்கி, ஆசியன் டெவலப்மண்ட் வங்கி உள்ளிட்டவை இதில் அடங்கும்.
ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், ஜப்பான், அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் ஆதரவு கிடைத்துள்ளது. இந்திய வளர்ச்சி பாதையில் கொண்டுள்ள நம்பிக்கையை உணர்த்துவதாக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. உள்கட்டமைப்பு, தனியார் சந்தைகள், வளர்ச்சி சமபங்கு மற்றும் இந்திய ஜப்பான் வர்த்தக தாழ்வாரத்தில் காலநிலை முதலீடு உள்ளிட்ட நான்கு முதலீடு உத்திகளை இந்த நிதி பின்பற்றி வருகிறது.
இதன் முதல் உள்கட்டமைப்பு நிதி, ரூ.16,000 கோடி கொண்டது, இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு உள்கட்டமைப்பு நிதியாக உள்ளது. போக்குவரத்து, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு துறைகளில் செயல்பட்டு வருகிறது. இதன் தனியார் சந்தைகள் நிதி, பல்வேறு ஏஐ.எப்-களில் முதலீடு செய்துள்ளது. இவை, காலநிலை, குறைந்த விலை வீடுகள், சுகாதாரம் மற்றும் வென்சர் கேபிடல் நுட்பங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்கின்றன.
இதன் வியூக வாய்ப்புகள் நிதி, வளர்ந்து வரும் நிதிச்சேவைகள், சுகாதார நலன், உற்பத்தி ஆகிய துறைகளில் கவனம் செலுத்துகிறது. முதல் இரு தரப்பு நிதியான இந்தியா- ஜப்பான் நிதி, காலநிலை, சுழற்சி பொருளாதாரம், எரிசக்தி மாற்றம் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்துகிறது. இந்தியா- ஜப்பான் வர்த்தக தாழ்வாரத்திலும் முதலீடு செய்கிறது.
என்.ஐ.ஐ.எப் நிர்வகிக்கும் நிதிகள் கூட்டாக, போக்குவரத்து, எரிசக்தி, சுகாதார நலன், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, மின் போக்குவரத்து, குறைந்த விலை வீடுகள், உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த முதலீடுகள் கட்டி சக்தி, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, FAME மற்றும் PM E-DRIVE உள்ளிட்ட திட்டங்களுடன் பொருந்தும் வகையில் அமைகின்றன. தனியார் துறை முதலீடுகளுக்கு வழிவகுக்கும், அரசு தனியார் கூட்டு திட்டங்கள், முதலீடுகள் உள்ளிடவற்றில் மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்கு வியூக நோக்கிலான ஆலோசனைகளும் வழங்கு வருகிறது.
கடல்சார் வளர்ச்சி நிதி, ஆய்வு மேம்பாடு வளர்ச்சி நிதி அமைப்புக்கான ஆலோசனை, பணமாக்கல் தொடர்பாக அரசு ஆணையங்களுடன் கூட்டு, அரசு தனியார் கூட்டு மற்றும் தேசிய நலன் சார்ந்த இதர துறை சார்ந்த முதலீடு ஆலோசனைகள் இதில் அடங்கும்,
இந்தியாவுக்கு கூடுதலாக தனியார் முதலீட்டை ஈர்ப்பதில் இந்த நிதி முக்கிய பங்காற்றி வருவதன் அங்கீகாரமாக மத்திய அரசின் கூடுதல் முதலீடு ஆதரவு அமைகிறது. இது, போக்குவரத்து, எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் முதலீட்டை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் கூடுதல் நிதி, என்.ஐ.ஐ.எப் நிதியின் இரண்டாவது உள்கட்டமைப்பு சார்ந்த நிதியை அமைக்க பயன்படுத்தப்படும்.
என்.ஐ.ஐ.எப் உள்கட்டமைப்பு நிதி 2 (NIIF Infrastructure Fund II), ரூ.30,000 கோடிய இலக்கு நிதியை கொண்டுள்ளது. போக்குவரத்து, எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் மற்றும் நகரபுற உள்கட்டமைப்பு, மின் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யும். புதிய நிதி உத்திகள் மற்றும் தொடர்ச்சியான இரு தரப்பு நிதிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தும்.
இந்த அரசு ஒதுக்கீடு, இதன் கீழ் உள்ள முதலீடு தொகுப்புகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்கும் என்றும், இது அதிக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு வழிவகுத்து, தற்சார்பு இந்தியா மற்றும் 2047ல் ஆற்றல் மிக்க இந்தியா இலக்குகளை நோக்கு முன்னேற உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி- பிடிஐ. தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan

