ரூ.14 கோடி நிதி திரட்டியது கோவை செல்லப்பிராணிகள் நல நிறுவன ‘Right4Paws’
கோவையைச் சேர்ந்த முன்னணி செல்லப்பிராணிகள் நல நிறுவனம் அதிக மதிப்பு கொண்ட தனிநபர்கள் குழுவிடம் இருந்து ரூ.14 கோடி ஏ சுற்று நிதி திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த முன்னணி செல்லப்பிராணிகள் நல நிறுவனம் 'பெட் பிரகல்ப்'-ன் (Pet Prakalp India Pvt Ltd) சொந்த செல்லப்பிராணிகள் ஊட்டசாத்து பிராண்ட் ‘ரைட்4பாஸ்’ (Right4Paws) அதிக மதிப்பு கொண்ட தனிநபர்கள் குழுவிடம் இருந்து ஏ சுற்று நிதியாக ரூ.14 கோடி திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த துறையில் துவக்க நிலை முதல் மத்திய நிலையில் உள்ள நிறுவனங்கள் வரை பொதுவாக சிறிய அளவில் நிதி திரட்டுவது வழக்கமாக உள்ள நிலையில், இந்த நிதிச்சுற்று நிறுவனம் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் இது தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகளுக்கான அறிவியல் சார்ந்த இயற்கையான ஊட்டச்சத்து தீர்வுகளை உருவாக்குவது மற்றும் செல்லப்பிராணி இனங்களுக்கு ஏற்ற உயர் தரமான உணவுகளை இந்தியா முழுவதும் கிடைக்கச்செய்வது எனும் நிறுவன நோக்கத்தில் இந்த முதலீடு முக்கிய மைல்கல்லாக அமைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதி பரிவர்த்தனைக்கு ஐக்கிய அமீரகத்தின் த்ரி பின்ஸ் கேபிடல் ஆலோசகராக செயல்பட்டுள்ளது. இந்த முதலீடு, உற்பத்தி உள்கட்டமைப்பு வசதியை விரிவாக்க, உற்பத்தி திறனை அதிகரிக்க மற்றும் நிறுவன ஆற்றலை அதிகரிக்க பயன்படுத்திக்கொள்ளப்படும்.
பிரத்யேக திறமையாளர்களைக் கொண்டுவர மற்றும் செயல்பாட்டு மற்றும் வாழ்க்கை நிலை ஊட்டச்சத்து பிரிவில் புதிய பொருட்களை அறிமுகம் செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்திய சந்தையில் விநியோக அமைப்பை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. சர்வதேச ஏற்றுமதிக்கான வலுவான அடித்தளம் அமைக்க உள்ளது.
பெட் பிரகல்ப் இந்தியா நிறுவனம், இந்த வர்த்தகத்தின் ஆய்வு, புதுமையாக்கம் மற்றும் உற்பத்தி முதுகெலும்பாக அமைகிறது. ‘ரைட்4பாஸ்’ நுகர்வோர் முனையில் உள்ள பிராண்டாக அறியப்படுகிறது.
“இந்தியாவில் செல்லப்பிராணிகளுக்கான ஊட்டசத்து தரத்தை உயர்த்தும் எங்கள் முயற்சியில் இந்த நிதிச்சுற்று முக்கிய மைல்கல்லாகும். ரைட்4பாஸ் – ல் நாங்கள் செல்லப்பிராணி இனங்களுக்கு ஏற்ற முழுமையான உணவை, நவீன உலர் ஊட்டசத்துடன் இணைந்து அளிக்கிறோம். எங்கள் அறிவியல் சார்ந்த ஊட்டச்சத்து உணவு யூகே-வில் உள்ள விலங்குநல வல்லுனர்களால் வழிநடத்தப்பட்டு, பல ஆண்டு ஆய்வு அடைப்படையிலானது,” என நிறுவனர் மற்றும் இயக்குனர் தனு ராய் கூறியுள்ளார்.
“எங்களுக்கு கிடைத்துள்ள வலுவான முதலீட்டாளர் நம்பிக்கை, எங்களது மாறுபட்ட அணுகுமுறை, சொந்த தொழில்நுட்பம் மற்றும் சந்தை சார்ந்த தன்மை, நீண்ட கால நோக்கிற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்” என்று இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் சமீர் அச்சன் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan

