Crescent Innovation மையம் ஆக்ஸ்ட் 5 நடத்தும் ‘Mega Demo Day’ - 150க்கும் மேலான ஸ்டார்ட் அப்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்பு!
கிரசண்ட் இன்னவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சில் நடத்தும் ஸ்டார்ட அப் நிறுவனங்களுக்கான ‘மெகா டெமோ டே’ நிகழ்ச்சியின் ஐந்தாவது பதிப்பு ஆக்ஸ்ட் 5ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் 150க்கும் மேலான ஸ்டார்ட் அப்கள், முதலீட்டாளர்கள், ஆய்வாளர்கள், வல்லுனர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னை கிரசண்ட் இன்னவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சில் நடத்தும் ஸ்டார்ட அப் நிறுவனங்களுக்கான ‘மெகா டெமோ டே’ (5th Mega Demo Day) நிகழ்ச்சியின் ஐந்தாவது பதிப்பு ஆக்ஸ்ட் 5ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் 150க்கும் மேலான ஸ்டார்ட் அப்கள், முதலீட்டாளர்கள், ஆய்வாளர்கள், வல்லுனர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் (BSACIST), செயல்பட்டு வரும் 'கிரசண்ட் இன்னவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (Crescent Innovation and Incubation council), ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் புதுமையாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ’மெகா டெமோ டே’ நிகழ்ச்சியை நான்கு பதிப்புகளாக நடத்தி வருகிறது.

ஸ்டார்ட் அப் அறிமுகம் கூட்டு முயற்சிக்கான மேடையாக இந்த நிகழ்ச்சி உருவாகியுள்ளது. இன்குபேட்டராக செயல்படுவதோடு ஸ்டார்ட் அப்'களுக்கான சூழலாகவும், வழிகாட்டியாகவும் இந்த மையம் விளங்குகிறது. இதுவரை இந்த மையத்தில், 158 ஸ்டார்ட் அப்'கள் உருவாகியுள்ளன. 54 மில்லியன் டாலருக்கு மேல் நிதி மற்றும் முதலீடாக கிடைத்துள்ளது.
மெகா டெமோ டே வரிசையில் ஐந்தாவது பதிப்பு, இந்த மையம் அமைந்துள்ள வளாகத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேலான ஸ்டார்ட் அப்'கள் இதில் பங்கேற்று தங்கள் புதுமையாக்கங்களை காட்சிப்படுத்த உள்ளனர்.
முன்னணி முதலீட்டாளர்கள், வென்சர் முதலீட்டாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், முன்னணி பேச்சாளர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
பார்வையாளர்களுக்காக கிரசண்ட் பவுலியன், இன்னவேஷன் பவுலியன், லைவ்ல்ஹுட் பவுலியன் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்டார்ட் அப் நிகழ்ச்சிகள், உரையாடல்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து, பொருட்கள் அறிமுகம் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டுள்ளன. வலைப்பின்னல் வாய்ப்புகளும் கிடைக்கும். இந்த ஆண்டு பதிப்பின் சிறப்பு நிகழ்ச்சியாக அடல் இன்குபேஷன் மையம் துவக்கப்பட உள்ளது. யுவர்ஸ்டோரி இந்த நிகழ்ச்சியின் ஊடக பார்ட்னராக உள்ளது.
Edited by Induja Raghunathan

