கொரோனா எதிர்ப்பு மருந்தான 2-டிஜிக்கு ஒப்புதல்: டிஆர்டிஓ அவசரகால நடவடிக்கை!
வாய்வழி எடுத்துக்கொள்ளப்படும் தடுப்பு மருந்து!
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பின் காரணமாக தடுப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்கனவே இருக்கும் தடுப்பு மருந்துகளுடன், அவசரகால தடுப்பு மருந்தாக மருத்துவக்குழு பல மருந்துகளை பரிந்துரை செய்து அனுமதி வாங்க முயற்சிகள் செய்து வருகிறது.
அந்த வகையில், அவசரகால பயன்பாட்டிற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கிய கொரோனா எதிர்ப்பு மருந்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் இணைந்து 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற இந்த மருந்தை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் நடந்த 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் மருத்துவ பரிசோதனைகளில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக குணப்படுத்த இம்மருந்து உதவுவது மற்றும் துணை ஆக்ஸிஜன் சார்புநிலையை வெகுவாக குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மற்ற தடுப்பு மருந்துகள் ஊசிகள் மூலமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், இது 2-டிஜி தூள் வடிவில் சச்செட் எனப்படும் சிறிய பாக்கெட்டில் பவுடராக கொடுக்கப்படும்.
இதனால் இந்த மருந்தை தண்ணீரில் கரைப்பதன் மூலம் வாய்வழியாக எடுத்துக்கொள்ள முடியும். இது வைரஸ் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் குவிந்து வைரஸ் தொகுப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது. வைரஸ் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட குவிப்பு இந்த மருந்தை தனித்துவமாக்குகிறது.
”COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த மருந்து பெரிதும் பயனளிக்கும்," என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவின் படி, கடுமையான COVID-19 நோயாளிகளுக்கு மிதமான மற்றும் துணை சிகிச்சையாக இந்த மருந்தை அவசரமாக பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. குளுக்கோஸின் பொதுவான மூலக்கூறு மற்றும் அனலாக் என்பதால், இதை எளிதில் உற்பத்தி செய்து நாட்டில் ஏராளமாக கிடைக்கச் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று கட்ட சோதனைகளின் முடிவில் இந்த மருந்து மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகள் கொரோனா பரிசோதனையில் அதிக விகிதம் கொரோனா இல்லை என தெரிவந்து உள்ளது என கூறி உள்ளது.