எலான் மஸ்க்கின் xAI 20 பில்லியன் டாலர்கள் நிதி திரட்டியது!
இந்த சுற்றுக்கு முன்பே பல பெரிய முதலீடுகளை பெற்றிருந்த xAI, Series E மூலம் மொத்த முதன்மை முதலீட்டை பத்து பில்லியன் டாலர்களைத் தாண்டிய அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் தனியார் ஜெனரேட்டிவ் AI நிறுவனங்களில் மிக அதிக மூலதனம் கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக xAI திகழ்கிறது.
எலான் மஸ்க் நிறுவிய செயற்கை நுண்ணறிவு நிறுவனம் xAI, அதன் Series E முதலீட்டு சுற்றில் எதிர்பார்ப்பையும் மீறி $20 பில்லியன் திரட்டியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த $15 பில்லியன் இலக்கைத் தாண்டி இந்த முதலீடு கிடைத்துள்ளது. இதில் அரசுத் துறை முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகக் கூட்டுப்பங்குதாரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த முதலீட்டு சுற்றில் Valor Equity Partners, StepStone Group, Fidelity Management & Research, Qatar Investment Authority, MGX, Baron Capital Group ஆகியவை பங்கேற்றுள்ளன. மேலும், x AI-யின் கணினி திறன் விரிவாக்கத்திற்கு ஆதரவளித்ததாக Nvidia மற்றும் Cisco Investments ஆகிய வர்த்தகக் கூட்டு முதலீட்டாளர்களை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சுற்றுக்கு முன்பே பல பெரிய முதலீடுகளை பெற்றிருந்த xAI, Series E மூலம் மொத்த முதன்மை முதலீட்டை பத்து பில்லியன் டாலர்களைத் தாண்டிய அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் தனியார் ஜெனரேட்டிவ் AI நிறுவனங்களில் மிக அதிக மூலதனம் கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக xAI திகழ்கிறது.

2025ஆம் ஆண்டில் கடன் மற்றும் ஈக்விட்டி கலவையைக் கொண்டு கூடுதல் நிதி திரட்டியதாகவும், கணினி வளங்களை அதிகம் தேவைப்படுத்தும் AI திட்டங்களுக்கு முதலீட்டாளர்களிடையே வலுவான ஆர்வம் இருப்பதை இது காட்டுவதாகவும் xAI தெரிவித்துள்ளது.
இந்த நிதி, உட்கட்டமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் தீவிர முன்னேற்றத்திற்கு உதவும், என அந்நிறுவனம் கூறுகிறது. 2025 முடிவில் Colossus I மற்றும் II சூப்பர் கம்ப்யூட்டர்களை இயக்கும் வகையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட H100 GPU சமமான திறன் இருந்ததாகவும், அதனால் Grok மாடல்களின் செயல்திறன் மேம்பட்டதாகவும் xAI தெரிவித்தது.
xAI வெளியிட்ட தயாரிப்பு முக்கிய அம்சங்களில் Grok 4 தொடர், பல மொழிகளில் குறைந்த தாமதத்துடன் உரையாடும் Grok Voice, மற்றும் வேகமான படம்–வீடியோ உருவாக்கத்திற்கான Grok Imagine ஆகியவை இடம்பெறுகின்றன. மேலும் X மற்றும் Grok செயலிகளில் மொத்தம் சுமார் 60 கோடி மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் இருப்பதாகவும், Grok 5 தற்போது பயிற்சியில் இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிதி, முன்பயிற்சி அளவிலான reinforcement learning போன்ற கணினி-அதிக நுட்பங்களை பயன்படுத்தி Grok-ன் தர்க்கம் மற்றும் செயற்பாட்டு திறனை மேம்படுத்த உதவும் என xAI கூறுகிறது. ஆனால், Grok மாடல் சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளது. அனுமதியில்லாத அல்லது பாலியல் தன்மை கொண்ட deepfake படங்கள் உள்ளிட்ட தீங்கான உள்ளடக்கங்களை உருவாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் குடிமக்கள் அமைப்புகளின் விமர்சனங்களும், இந்தியாவை உட்பட சில நாடுகளில் ஒழுங்குமுறை கண்காணிப்பு கோரிக்கைகளும் அதிகரித்துள்ளன.
அறிவியல் புரிதலை முன்னேற்றுவதே xAI-யின் நோக்கம் என நிறுவனம் கூறினாலும், வருமானமயமாக்கல், உள்ளடக்க பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் ஆகியவை Grok வளர்ச்சியில் உடனடி சவால்களாக இருக்கும் என்று இத்துறை சார்ந்த விவரம் அறிந்தோர் தெரிவிக்கின்றனர்.

