கடன் மற்றும் ஈக்விட்டி மூலம் ரூ.411 கோடி நிதி திரட்டிய சென்னை Yubi நிறுவனம்!
Yubi; புதிய மூலதனத்தை தென்கிழக்காசியா மற்றும் அமெரிக்க சந்தைகளில் விரிவாக்கம் செய்யவும், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள தற்போதைய வர்த்தகத்தை வலுப்படுத்தவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
சென்னையை அடிப்படையாக செயல்படும் ஃபின்டெக் நிறுவனமான ’யூபி’ (Yubi Group), உலக சந்தைகளில் விரிவடையவும், செயற்கை நுண்ணறிவு (AI) தயாரிப்புகளை பலப்படுத்தவும் மொத்தம் ரூ.411 கோடி புதிய நிதியைத் திரட்டியுள்ளது.
இந்த நிதி நீண்டகால கட்டமைப்பு கடன் மற்றும் ஈக்விட்டி ஆகியவற்றின் மூலம் திரட்டப்பட்டதாக யூபி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில், EvolutionX Debt Capital நிறுவனம் அதிகபட்சம் ரூ.336 கோடி வழங்கியுள்ளது. யூபி குழுமத்தின் நிறுவனர் மற்றும் CEO கவுரவ் குமார், தனிப்பட்ட முறையில் மேலும் ரூ.75 கோடி முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் அவரின் மொத்த ஈக்விட்டி முதலீடு ரூ.330 கோடியை கடந்துள்ளது.
“இந்த நிதி எங்களுக்கு இந்தியாவில் பெற்ற வெற்றியை சர்வதேச சந்தைகளிலும் மீண்டும் உருவாக்க, எங்கள் AI ஸ்டாக்கை வலுப்படுத்த மற்றும் எங்கள் பொருளாதாரச் சூழலை விரிவுபடுத்த உதவும்,” என்று கவுரவ் குமார் தெரிவித்துள்ளார்.
யூபி; புதிய மூலதனத்தை தென்கிழக்காசியா மற்றும் அமெரிக்க சந்தைகளில் விரிவாக்கம் செய்யவும், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள தற்போதைய வர்த்தகத்தை வலுப்படுத்தவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
EvolutionX நிறுவனத்தின் கூட்டாளி ராகுல் ஷா,
“இந்தியாவில் கடன் சூழலை மாற்றியமைத்த யூபியின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. நிறுவனத்தின் அளவு, தொழில்நுட்ப வலிமை மற்றும் லாபத்திற்கான தெளிவான பாதை எங்களை முதலீடு செய்யத் தூண்டியது,” எனக் கூறினார்.
யூபி இதுவரை ரூ.3.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட கடன்களை வசதியாக்கியுள்ளதாக, மேலும் 17,000 நிறுவனங்கள் மற்றும் 6,200-க்கும் மேற்பட்ட கடன் வழங்குநர்கள்/முதலீட்டாளர்கள் தங்களை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் சேவைகள் சேகரிப்பு செலவுகளை 57% குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
நிறுவனம் Peak XV, Lightspeed, Lightrock, TVS Capital Funds, B Capital Group, Dragoneer மற்றும் Insight Partners போன்ற முன்னணி முதலீட்டாளர்களால் ஆதரிக்கப்படுகிறது.
பணவரவு வளர்ச்சியுடன் இருந்தாலும், யூபியின் FY25 நஷ்டம் 5% உயர்ந்து ரூ.416.1 கோடியாக உள்ளது. அதேவேளை, வருவாய் 36% அதிகரித்து ரூ.660.1 கோடியாக உயர்ந்துள்ளது. Adjusted EBITDA நஷ்டம் கடந்த ஆண்டின் ரூ.155 கோடியிலிருந்து ரூ.69 கோடியாக குறைந்துள்ளது.
