கருடா ஏரோஸ்பேஸ் - மைக்ரான் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் இடையே ஒப்பந்தம்
பொது பங்கு வெளியீட்டை (ஐபிஓ) எதிர்நோக்கும் ட்ரோன் ஸ்டார்ட் அப் கருடா ஏரோஸ்பேஸ், துல்லியமான பியூஸ்கள், பாதுகாப்பு ஆயுத அமைப்புகள் மற்றும் முக்கிய ராணுவ உதிரி பாகங்களை தயாரிக்கும் மைக்ரான் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பொது பங்கு வெளியீட்டை (ஐபிஓ) எதிர்நோக்கும் ட்ரோன் ஸ்டார்ட்அப் கருடா ஏரோஸ்பேஸ், துல்லியமான பியூஸ்கள், பாதுகாப்பு ஆயுத அமைப்புகள் மற்றும் முக்கிய ராணுவ உதிரி பாகங்களை தயாரிக்கும் மைக்ரான் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம், பரஸ்பரம் வலு சேர்க்கும் தன்மை கொண்ட இரண்டு மேம்பட்ட உற்பத்தி நிறுவனங்களை, பாதுகாப்பு துறை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானம் உள்ளிட்ட அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உருவாக்கத்தை துரிதமாக்கும் பயணத்தில் ஒன்றிணைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கருடா ஏரோஸ்பேஸ் மற்றும் மைக்ரான் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் பொருட்கள் விநியோகம், கூட்டு தொழில்நுட்ப உருவாக்கம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்தும். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பியூஸ்களை உருவாக்குவதில் மைக்ரான் நிறுவனத்திற்கு உள்ள நிபுணத்துவத்தை கருடா ஏரோஸ்பேஸின் மேம்பட்ட ட்ரோன் நுட்பத்தில் ஒருங்கிணப்பதன் மூலம் இந்தக் கூட்டு, அடுத்த தலைமை பாதுகாப்பு தீர்வுகள் உருவாக்கத்தை துரிதமாக்க உள்ளது என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.
“துல்லிய பொறியியல் மற்றும் பாதுகாப்பு உற்பத்தியில் சிறந்த செயல்பாடுகளை கொண்ட மைக்ரான் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்கிறோம். இரண்டு மேம்பட்ட உற்பத்தி நிறுவனங்களின் ஆற்றலை இந்த கூட்டு ஒன்றிணைக்கிறது” என்று கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறியுள்ளார்.
“பாதுகாப்பு, ஏரோஸ்பேஸ் மற்றும் சுகாதார நலன் துறைகளில் தீர்வுகளை உருவாக்குவதில் மைக்ரான் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அறுபது ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது.
பாதுகாப்பு துறை எதிர்காலம் புதுமையாக்கம், சொந்த நுட்பம் மற்றும் வியூக நோக்கிலான கூட்டுகள் சார்ந்திருக்கும். கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடனான எங்கள் கூட்டு, இந்திய பாதுகாப்புத் துறை வலுவாக்குவதற்கான உள்நாட்டு தீர்வுகளை உருவாக்க உதவும்” என்று நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் விக்ரம் சாகல் கூறியுள்ளார்.
இந்தியாவின் ட்ரோன் சுழல் விரிவடைந்து வரும் நிலையில், கருடா ஏரோஸ்பேஸ் மற்றும் மைக்ரோன் நிறுவனங்கள் எதிர்வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள மேம்பட்ட உற்பத்தி, பாதுகாப்பு பொறியியல் உள்ளிட்ட துறைகளில் தங்கள் ஆற்றலை கூட்டாக பயன்படுத்திக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Induja Raghunathan

