Gold Rate Chennai: இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை - ரூ.1,080 உயர்வு!
ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.3000 சரிந்த நிலையில், இன்று மீண்டும் வெகுவாக உயர்ந்துள்ளது. எனினும், சவரன் விலை ரூ.90,000-க்கு கீழாக இருப்பதால் சுப காரியங்களுக்கு தயக்கமுமின்றி தங்க நகை வாங்கலாம்.
ஆபரணத் தங்கத்தின் விலை இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை ரூ.3,000 அளவுக்கு குறைந்தது. 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.11,075 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.89,680 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.12,082 ஆகவும், சவரன் விலை ரூ.96,656 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.3000 சரிந்த நிலையில், இன்று மீண்டும் வெகுவாக உயர்ந்துள்ளது. எனினும், சவரன் விலை ரூ.90,000-க்கு கீழாக இருப்பதால் சுப காரியங்களுக்கு தயக்கமுமின்றி தங்க நகை வாங்கலாம். அதேபோல், முதலீடுக்கும் இது உகந்த நேரம்தான் என்றாலும், உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையிலும் இன்று சற்றே உயர்வு ஏற்பட்டது.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (29.10.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.135 உயர்ந்து ரூ.11,075 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,080 உயர்ந்து ரூ.89,680 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.147 உயர்ந்து ரூ.12,229 ஆகவும், சவரன் விலை ரூ.1,176 உயர்ந்து ரூ.97,832 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (29.10.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.166 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,66,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.17 ஆக உள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடும் மீண்டும் உயர்ந்ததால், ஆபரணத் தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்தது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,075 (ரூ.135 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,680 (ரூ.1,080 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,229 (ரூ.147 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.97,832 (ரூ.1,176 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,075 (ரூ.135 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,680 (ரூ.1,080 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,229 (ரூ.147 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.97,832 (ரூ.1,176 உயர்வு)
Edited by Induja Raghunathan

