Gold Rate Chennai: அடுத்த இன்ப அதிர்ச்சி... தங்கம் விலை ரூ.1,080 வீழ்ச்சி!
ஆபரணத் தங்கம் விலை கடந்த 4 தினங்களில் மட்டும் ரூ.2,200-க்கும் மேலாக குறைந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.12 லட்சமாக உள்ளது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது.
ஆபரணத் தங்கம் விலை நான்காவது நாளாக இன்றும் வெகுவாக குறைந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது.
சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 குறைந்து ரூ.14,135 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.1,13,080 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து ரூ.15,420 ஆகவும், சவரன் விலை ரூ.440 குறைந்து ரூ.1,23,360 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை கடந்த 4 தினங்களில் மட்டும் ரூ.2,200-க்கும் மேலாக குறைந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.12 லட்சமாக உள்ளது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (24.9.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.135 குறைந்து ரூ.14,000 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,080 குறைந்து ரூ.1,12,000 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.147 குறைந்து ரூ.15,273 ஆகவும், சவரன் விலை ரூ.1,176 குறைந்து ரூ.1,22,184 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.250 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,50,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.86 ஆக உள்ளது. ஈரான் போர் பதற்றம் நீடிக்கிறது. சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு மந்தமாக இருப்பதால், ஆபரணத் தங்கம் விலையும் சற்று சரிந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,000 (ரூ.135 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,000 (ரூ.1,080 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,273 (ரூ.147 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,184 (ரூ.1,176 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,000 (ரூ.135 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,000 (ரூ.1,080 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,273 (ரூ.147 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,184 (ரூ.1,176 குறைவு)
Edited by Induja Raghunathan

