Gold Rate Chennai: எகிறியது தங்கம் விலை - சவரனுக்கு ரூ.2,320 உயர்வு!
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2,320 உயர்ந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.14 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்தது.
தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று வெகுவாக உயர்ந்தது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி தந்துள்ளது.
சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.225 குறைந்து ரூ.13,950 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,800 குறைந்து ரூ.1,11,600 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.246 குறைந்து ரூ.15,218 ஆகவும், சவரன் விலை ரூ.1,968 குறைந்து ரூ.1,21,744 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2,320 உயர்ந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.14 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (3.9.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.290 உயர்ந்து ரூ.14,240 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.317 உயர்ந்து ரூ.15,535 ஆகவும், சவரன் விலை ரூ.2,536 உயர்ந்து ரூ.1,24,280 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (2.9.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.255 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.2,55,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.40 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீட்டில் ஏற்றம் நிலவுவதால், ஆபரணத் தங்க விலையும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,240 (ரூ.290 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,920 (ரூ.2,420 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,535 (ரூ.317 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,24,280 (ரூ.2,536 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,240 (ரூ.290 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,920 (ரூ.2,420 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,535 (ரூ.317 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,24,280 (ரூ.2,536 உயர்வு)
Edited by Induja Raghunathan

