Gold Rate Chennai: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி - தங்கம் விலை ரூ.880 உயர்வு!
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.880 அதிகரித்தது. சவரன் விலை இப்போது ரூ.1.18 லட்சத்தை நோக்கி நகர்கிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் அளவுக்கு உயர்ந்துள்ளது. நேற்று ரூ.1,600 அதிகரித்த நிலையில், இன்று ரூ.880 உயர்ந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.14,600 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.218 உயர்ந்து ரூ.15,927 ஆகவும், சவரன் விலை ரூ.1,744 உயர்ந்து ரூ.1,27,416 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.880 அதிகரித்தது. சவரன் விலை இப்போது ரூ.1.18 லட்சத்தை நோக்கி நகர்கிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (21.8.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.110 உயர்ந்து ரூ.14,710 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.880 உயர்ந்து ரூ.1,17,680 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.120 உயர்ந்து ரூ.16,047 ஆகவும், சவரன் விலை ரூ.960 உயர்ந்து ரூ.1,28,376 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (21.8.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.265 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,65,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.72 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு உயர்வதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,710 (ரூ.110 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,17,680 (ரூ.880 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,047 (ரூ.120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,28,376 (ரூ.960 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,710 (ரூ.110 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,17,680 (ரூ.880 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,047 (ரூ.120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,28,376 (ரூ.960 உயர்வு)
Edited by Induja Raghunathan

