Gold Rate Chennai: மீண்டும் ஏறுமுகத்துடன் ரூ.95,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.560 அதிகரித்தது. சவரன் விலை ரூ.95,000-ஐ நெருங்குகிறது. இதற்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி கண்டிருப்பதும் ஒரு காரணம்.
தங்கம் விலை மீண்டும் இன்று ஏறுமுகம் கண்டு, சவரன் விலை ரூ.95,000-ஐ நெருங்குவது, நகை வாங்க விழைவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 குறைந்து ரூ.11,770 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 குறைந்து ரூ.94,160 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 குறைந்து ரூ.12,840 ஆகவும், சவரன் விலை ரூ.264 குறைந்து ரூ.1,02,720 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.560 அதிகரித்தது. சவரன் விலை ரூ.95,000-ஐ நெருங்குகிறது. இதற்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி கண்டிருப்பதும் ஒரு காரணம். வெள்ளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது தொடர்கிறது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (28.11.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.11,840 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.94,720 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 உயர்ந்து ரூ.12,916 ஆகவும், சவரன் விலை ரூ.608 உயர்ந்து ரூ.1,03,328 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (28.11.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ.183 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,000 உயர்ந்து ரூ.1,83,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக,
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.89.47 ஆக உள்ளது. அத்துடன் தங்கம் மீதான முதலீடும் சற்றே உயர்ந்ததால் ஆபரணத் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,840 (ரூ.70 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.94,720 (ரூ.560 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,916 (ரூ.76 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,03,328 (ரூ.608 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,840 (ரூ.70 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.94,720 (ரூ.560 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,916 (ரூ.76 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,03,328 (ரூ.608 உயர்வு)
Edited by Induja Raghunathan

