Gold Rate Chennai: தீபாவளிக்குப் பின் ஷாக் - ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2,000+ உயர்வு
ஆபரணத் தங்கம் சவரன் விலை ரூ.97,000, கிராம் விலை ரூ.12,000-ஐ மீண்டும் தாண்டி இருப்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எனினும், வெள்ளி விலையில் தொடர் வீழ்ச்சி நிலவுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான இன்று, நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி தரும் வகையில், ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
சென்னையில் தீபாவளியான திங்கள்கிழமை அன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.11,920 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.97,440 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.13,004 ஆகவும், சவரன் விலை ரூ.1,04,032 ஆகவும் விற்பனை ஆனது.
தற்போது ஆபரணத் தங்கம் சவரன் விலை ரூ.97,000, கிராம் விலை ரூ.12,000-ஐ மீண்டும் தாண்டி இருப்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எனினும், வெள்ளி விலையில் தொடர் வீழ்ச்சி நிலவுகிறது. தங்கம் விலை தற்போது ரூ.98,000-ஐ நெருங்கி வருவதால் சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு செய்யலாம் என எண்ணுவோர், தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (21.10.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.260 உயர்ந்து ரூ.12,180 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.2,080 உயர்ந்து ரூ.97,440 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.284 உயர்ந்து ரூ.13,288 ஆகவும், சவரன் விலை ரூ.2,272 உயர்ந்து ரூ.1,06,304 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (21.10.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.188 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 குறைந்து ரூ.1,88,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.87.98 ஆக மீண்டும் சரிந்து வருகிறது. இத்துடன், தங்கம் மீதான முதலீடும் சற்றே அதிகரித்துள்ளதால், அதன் தேவை உயர்ந்து ஆபரணத் தங்கம் விலையும் உச்சம் கண்டுள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,180 (ரூ.260 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.97,440 (ரூ.2,080 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,288 (ரூ.284 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,304 (ரூ.2,272 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,180 (ரூ.260 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.97,440 (ரூ.2,080 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,288 (ரூ.284 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,304 (ரூ.2,272 உயர்வு)
Edited by Induja Raghunathan

