Gold Rate Chennai: தங்கம் விலை மீண்டும் அதிரடி உச்சம் - சவரனுக்கு ரூ.3,600 உயர்வு!
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.3,600 உயர்ந்து, சவரன் விலை ரூ.1.17 லட்சத்தை தாண்டிவிட்டது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 அதிகரித்து அதிர்ச்சி தந்துள்ளது.
தங்கம் விலை நேற்று சற்றே தணிந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது, சாமானிய மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.215 குறைந்து ரூ.14,200 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,720 குறைந்து ரூ.1,13,600 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.235 குறைந்து ரூ.15,491 ஆகவும், சவரன் விலை ரூ.1,880 குறைந்து ரூ.1,23,928 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.3,600 உயர்ந்து, சவரன் விலை ரூ.1.17 லட்சத்தை தாண்டிவிட்டது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 அதிகரித்து அதிர்ச்சி தந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (23.1.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.450 உயர்ந்து ரூ.14,650 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.3,600 உயர்ந்து ரூ.1,17,200 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.491 உயர்ந்து ரூ.15,982 ஆகவும், சவரன் விலை ரூ.3,928 உயர்ந்து ரூ.1,27,856 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (23.1.2026) 1 கிராம் வெள்ளி ரூ.20 உயர்ந்து ரூ.360 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.20,000 உயர்ந்து ரூ.3,46,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.91.59 ஆக உள்ளது. ரூபாய் மதிப்பின் வரலாறு காணாத வீழ்ச்சி கண்டு வருவது, சர்வதேச அரசியல் சூழல் பதற்ற நிலை, அதனால் தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு காரணமாக ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,650 (ரூ.450 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,17,200 (ரூ.3,600 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,982 (ரூ.491 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,27,856 (ரூ.3,928 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,650 (ரூ.450 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,17,200 (ரூ.3,600 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,982 (ரூ.491 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,27,856 (ரூ.3,928 உயர்வு)
Edited by Induja Raghunathan

