Gold Rate Chennai: எழுச்சிக்குப் பின் அமைதி - தங்கம் விலையில் மாற்றம் இல்லை!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.4,000-க்கும் மேலாக உயர்ந்த நிலையில், இன்று மாற்றம் ஏதுமின்றி இருக்கிறது. வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் ஏதுமில்லை.
கடந்த சில தினங்களாக வெகுவாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று மாற்றமின்றி விற்பனையாவது, நகை வாங்க விழைவோருக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.150 உயர்ந்து ரூ.13,700 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,200 உயர்ந்து ரூ.1,09,600 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.163 உயர்ந்து ரூ.14,945 ஆகவும், சவரன் விலை ரூ.1,304 உயர்ந்து ரூ.1,19,560 ஆகவும் விற்பனை ஆனது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.4,000-க்கும் மேலாக உயர்ந்த நிலையில், இன்று மாற்றம் ஏதுமின்றி இருக்கிறது. சவரன் விலை இப்போது ரூ.1.10 லட்சத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (4.7.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,700 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,09,600 ஆகவும் மாற்றமின்றி இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.14,945 ஆகவும், சவரன் விலை ரூ.1,19,560 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (4.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.260 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,60,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.52 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா மோதல் பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,700 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,09,600 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,945 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,560 (மாற்றமில்லை)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,700 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,09,600 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,945 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,560 (மாற்றமில்லை)
Edited by Induja Raghunathan

