Gold Rate Chennai: சட்டென சரிந்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு குறைவு?
தங்கம் விலை இன்று சரிந்துள்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று சரிந்துள்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (05/06/2023)
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையானது இன்று சற்றே குறைந்துள்ளது நகை வாங்கக் காத்திருந்தவர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் நல் வாய்ப்பாக அமைந்துள்ளது.
கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது தங்கத்தின் விலை கிராமிற்கு 5,580 ரூபாயாகவும், சவரனுக்கு 44,640 ரூபாயாகவும் இருந்தது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,570 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 44,560 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 6,027 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 48,216 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 10 காசுகள் குறைந்து 77 ரூபாய் 70 காசுகளுக்கும், கிலோவிற்கு 100 ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க டாலரின் மதிப்பும், கருவூல வருவாயும் அதிகரித்து வருவது தங்கத்தின் விலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்திருப்பதும் விலை சரிய முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,570 (மாற்றம்: ரூ.10 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,560 (மாற்றம்: ரூ.80 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,027 (மாற்றம்: ரூ.10 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,216 (மாற்றம்: ரூ.80 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,530 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,240 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,033 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,264 (மாற்றமில்லை)