Gold Rate Chennai: சடுகுடு ஆடும் தங்கம் விலை; ஒரே நாளில் இப்படியொரு ஏற்றமா?
தங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது நகை வாங்க காத்திருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது நகை வாங்க காத்திருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (21/04/2023)
நேற்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்த நிலையில், இன்று யாருமே எதிராத வகையில் 120 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் தங்கம் விலையில் ஏற்பட்ட இந்த அதிரடி மாற்றம் நடுத்தர குடும்ப மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,650 ரூபாய்க்கும், சவரன் 45,200 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 5,665 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 45,320 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 6,112 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 48,896 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து 81 ரூபாய் 30 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 300 ரூபாய் அதிகரித்து 81 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?
சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு சீரானதாலும், இந்தியாவில் அட்சய திருதியை முன்னிட்டும் தங்கம் விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் தங்கம் பெருகும் என்பது நம்பிக்கை, இதனால் இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதை அடுத்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,665 (மாற்றம்: ரூ.15 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.45,320 (மாற்றம்: ரூ.120 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,112 (மாற்றம்: ரூ.15 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,896 (மாற்றம்: ரூ.120 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,605 (மாற்றம்: ரூ.20 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,840 (மாற்றம்: ரூ.160 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,115 (மாற்றம்: ரூ.22 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,920 (மாற்றம்: ரூ.176 அதிகரிப்பு)

