Gold Rate Chennai: அட்சய திருதியை அதிரடி; தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை!
தங்கத்தின் விலை இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
தங்கத்தின் விலை இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (24/04/2023)
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அட்சய திருதியை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் மக்கள் நகை கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கம் வாங்கிச் சென்றனர். இதன் தாக்கம் காரணமாக இன்றும் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,605 ரூபாய்க்கும், சவரன் 44,840 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (திங்கட் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 5,615 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 44,920 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 6,096 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 48,768 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளி விலை இன்று சற்றே சரிந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 40 காசுகள் குறைந்து 80 ரூபாய்க்கும், கிலோவிற்கு 400 ரூபாய் குறைந்து 80 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தக்கூடும் என்ற முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு தங்கத்தின் மீதான முதலீடுகளை குறைக்கக் காரணமாக அமைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ள போதும், இந்தியாவில் தங்கத்தின் மீதான வரிச்சுமை காரணமாக விலை அதிகரித்து காணப்படுகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,615 (மாற்றம்: ரூ.10 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,920 (மாற்றம்: ரூ.80 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,096 (மாற்றம்: ரூ.10 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,768 (மாற்றம்: ரூ.80 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,565 (மாற்றம்: ரூ.7 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,520 (மாற்றம்: ரூ.56 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,071 (மாற்றம்: ரூ. 8 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,568 (மாற்றம்: ரூ.64 குறைவு)

