Gold Rate Chennai: தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு - இனி எப்படி?
ஆபரணத் தங்கம் விலை இன்று சற்றே சரிந்தாலும் கூட, சவரன் விலை ரூ.1 லட்சத்துக்கு மேலாகவே நீடிக்கிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ1 லட்சத்தை தாண்டிய நிலையில், இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு சற்றே ஆறுதல் அளித்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.140 உயர்ந்து ரூ.12,580 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,120 உயர்ந்து ரூ.1,00,640 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.110 உயர்ந்து ரூ.13,724 ஆகவும், சவரன் விலை ரூ.880 உயர்ந்து ரூ.1,09,792 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று சற்றே சரிந்தாலும் கூட, சவரன் விலை ரூ.1 லட்சத்துக்கு மேலாகவே நீடிக்கிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (3.1.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 குறைந்து ரூ.12,520 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 குறைந்து ரூ.1,00,160 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.66 குறைந்து ரூ.13,658 ஆகவும், சவரன் விலை ரூ.528 குறைந்து ரூ.1,09,264 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (3.1.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.4 குறைந்து ரூ.256 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4,000 குறைந்து ரூ.2,56,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை குறைவு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.01 ஆக உள்ளது.
சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு சற்றே குறைந்ததான் எதிரொலியாக ஆபரணத் தங்கம் விலையும் கொஞ்சம் குறைந்துள்ளது. சர்வதேச அளவில் ஸ்திரமற்ற வர்த்தகப் போக்கு நிலவுவதால் இனி வரும் நாட்களில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி வரும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,520 (ரூ.60 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,00,160 (ரூ.480 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,658 (ரூ.66 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,09,264 (ரூ.528 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,520 (ரூ.60 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,00,160 (ரூ.480 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,658 (ரூ.66 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,09,264 (ரூ.528 குறைவு)
Edited by Induja Raghunathan

