Gold Rate Chennai: தங்கம் விலை மேலும் குறைந்து ரூ.1.07 லட்சத்துக்கு கீழாக சரிவு!
ஆபரணத் தங்கம் விலை 3 நாட்களில் மட்டும் ரூ.3,000 அளவுக்கு குறைந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.07 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது.
மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை வெகுவாக சரிந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.160 குறைந்து ரூ.13,400 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,280 குறைந்து ரூ.1,07,200 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.175 குறைந்து ரூ.14,618 ஆகவும், சவரன் விலை ரூ.1,400 குறைந்து ரூ.1,16,944 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை 3 நாட்களில் மட்டும் ரூ.3,000 அளவுக்கு குறைந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.07 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (8.7.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 குறைந்து ரூ.13,330 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 குறைந்து ரூ.1,06,640 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 குறைந்து ரூ.14,542 ஆகவும், சவரன் விலை ரூ.608 குறைந்து ரூ.1,16,336 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (8.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.245 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,45,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.09 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா மோதல் பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,330 (ரூ.70 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,640 (ரூ.560 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,542 (ரூ.76 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,336 (ரூ.608 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,330 (ரூ.70 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,640 (ரூ.560 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,542 (ரூ.76 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,336 (ரூ.608 குறைவு)
Edited by Induja Raghunathan

