Gold Rate Chennai: தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்வு - மீண்டும் ஒரு லட்சத்தைத் தொடுமா?
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.40 உயர்ந்து ரூ.12,440 என்றும் 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு ரூ.43 உயர்ந்து 13,571 ரூபாயாகவும் உள்ளது
வியாழக்கிழமையான இன்று (18-12-25) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்: வியாழக்கிழமை (18-12-25)
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.40 உயர்ந்து ரூ.12,440 என்றும் 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு ரூ.43 உயர்ந்து 13,571 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து ரூ.99,520 என்றும் உள்ளன.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.400 உயர்ந்து ரூ.1,24,400 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 10 கிராம் விலை ரூ.430 உயர்ந்து ரூ.1,35,710 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.344 அதிகரித்து ரூ.1,08,568 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலையில் லேசான மாற்றம்:
வெள்ளி விலை வியாழக்கிழமையான இன்று 1 கிராம் விலை ரூ.2 அதிகரித்து ரூ.224 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,24,000 என்றும் உள்ளன.
காரணம்:
உலக அளவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், சர்வதேசச் சந்தை நிலவரங்களும் இந்த விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளது. மேலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் இறக்குமதி செலவு அதிகரிக்கிறது. இதனையடுத்து, தங்கம் வெள்ளி விலைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இன்னொரு முக்கியக் காரணம் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதைக் குறைத்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பான தங்கத்தில் முதலீடு செய்வதால் தேவை அதிகரிக்க அதிகரிக்க தங்கத்தின் விலை தாறுமாறாக எகிறி வருகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.12,440 (மாற்றம்ரூ.40அதிகம்)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.99520 (மாற்றம்ரூ320அதிகம்)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ13,571 (மாற்றம்ரூ43அதிகம்)
> 24 காரட்தங்கம்8கிராம்-ரூ108568 (மாற்றம்ரூ528அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ12,360(மாற்றம்ரூ.30அதிகம்)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ98880(மாற்றம்ரூ.240அதிகம்)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ13,484(மாற்றம்ரூ33அதிகம்)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ107872(மாற்றம்ரூ264அதிகம்)
