Gold Rate Chennai: அடுத்த ஷாக் - தங்கம் விலை மேலும் ரூ.1,680 அதிகரிப்பு!
ஆபரணத் தங்கம் விலை கடந்த வார இறுதியில் ரூ.3,000 அதிகரித்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,680 உயர்ந்தது. தற்போது சவரன் விலை ரூ.1.12 லட்சத்தை தாண்டியது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்தது.
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,680 அதிகரித்தது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி தந்துள்ளது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.13,860 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 உயர்ந்து ரூ.15,120 ஆகவும், சவரன் விலை ரூ.520 உயர்ந்து ரூ.1,20,960 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை கடந்த வார இறுதியில் ரூ.3,000 அதிகரித்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,680 உயர்ந்தது. தற்போது சவரன் விலை ரூ.1.12 லட்சத்தை தாண்டியது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (15.6.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.210 உயர்ந்து ரூ.14,070 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.229 உயர்ந்து ரூ.15,349 ஆகவும், சவரன் விலை ரூ.1,832 உயர்ந்து ரூ.1,22,349 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (15.6.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.280 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்து ரூ.2,78,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.60 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியான நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,070 (ரூ.210 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,560 (ரூ.1,680 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,349 (ரூ.229 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,349 (ரூ.1,832 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,070 (ரூ.210 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,560 (ரூ.1,680 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,349 (ரூ.229 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,349 (ரூ.1,832 உயர்வு)
Edited by Induja Raghunathan

