Gold Rate Chennai: வார ஆரம்பமே அதிர்ச்சி... ரூ.96,000-ஐ தாண்டியது தங்கம் விலை!
ஆபரணத் தங்கம் கிராம் விலை ரூ.12,000-ஐ கடந்துவிட்டது. சவரன் விலை ரூ.96,000-ஐ தாண்டியதும் அதிர்ச்சி அளித்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
மீண்டும் மீண்டும் புதிய உச்சம் நோக்கி நகரும் ஆபரணத் தங்கம் சவரன் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று ரூ.96,000-ஐ கடந்து, நகை வாங்க விழைவோருக்கு பெரும் அதிர்ச்சி தந்துள்ளது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.140 உயர்ந்து ரூ.11,980 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,120 உயர்ந்து ரூ.95,840 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.153 உயர்ந்து ரூ.13,069 ஆகவும், சவரன் விலை ரூ.1,224 உயர்ந்து ரூ.1,04,552 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் கிராம் விலை ரூ.12,000-ஐ கடந்துவிட்டது. சவரன் விலை ரூ.96,000-ஐ தாண்டியதும் அதிர்ச்சி அளித்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (1.12.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.90 உயர்ந்து ரூ.12,070 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.720 உயர்ந்து ரூ.96,560 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.98 உயர்ந்து ரூ.13,167 ஆகவும், சவரன் விலை ரூ.784 உயர்ந்து ரூ.1,05,336 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (1.12.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.4 உயர்ந்து ரூ.196 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4,000 உயர்ந்து ரூ.1,96,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.89.48 ஆக உள்ளது. ரூபாம் மதிப்பு வீழ்ச்சியுடன், பங்குச் சந்தை வர்த்தகமும் சரிவை சந்தித்து வருவதால், தங்கம் மீதான முதலீடும் அதிகரித்து, ஆபரணத் தங்கம் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,070 (ரூ.90 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.96,560 (ரூ.720 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,167 (ரூ.98 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,336 (ரூ.784 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,070 (ரூ.90 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.96,560 (ரூ.720 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,167 (ரூ.98 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,336 (ரூ.784 உயர்வு)
Edited by Induja Raghunathan

