Gold Rate Chennai: மீண்டும் 45,000-ஐ கடந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.120 உயர்வு!
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (25/04/2023)
அட்சய திருதியை காரணமாக இந்தியாவில் தங்கத்தின் தேவை கூடியதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது இல்லத்தரசிகள், நடுத்தரக் குடும்பத்தினர் உள்ளிட்டோரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,615 ரூபாய்க்கும், சவரன் 44,920 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 5,630 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 45,040 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 6,090 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 48,720 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமான அளவு அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 70 காசுகள் அதிகரித்து 80 ரூபாய் 70 காசுகளுக்கும், கிலோவிற்கு 700 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?
டாலரின் மதிப்பு மீண்டும் சரியத்தொடங்கியுள்ளது, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,630 (மாற்றம்: ரூ.15 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.45,040 (மாற்றம்: ரூ.120 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,090 (மாற்றம்: ரூ.15 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,720 (மாற்றம்: ரூ.120 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,585 (மாற்றம்: ரூ.20 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,680 (மாற்றம்: ரூ.160 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,093 (மாற்றம்: ரூ.22 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,744 (மாற்றம்: ரூ.176 அதிகரிப்பு)

