Gold Rate Chennai: தொடரும் மகிழ்ச்சி - தங்கம் விலை மேலும் ரூ.800 சரிவு!
சவரன் விலை ரூ.800 சரிந்து, ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து இறங்கு முகம் கண்டுள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.06 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை.
ஆபரணத் தங்கம் விலை இன்றும் வெகுவாக சரிந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 குறைந்து ரூ.13,300 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.1,06,400 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து ரூ.14,509 ஆகவும், சவரன் விலை ரூ.440 குறைந்து ரூ.1,16,072 ஆகவும் விற்பனை ஆனது.
சவரன் விலை ரூ.800 சரிந்து, ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து இறங்கு முகம் கண்டுள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.06 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (13.7.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 குறைந்து ரூ.13,200 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 குறைந்து ரூ.1,05,600 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 குறைந்து ரூ.14,400 ஆகவும், சவரன் விலை ரூ.872 குறைந்து ரூ.1,15,200 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (13.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.240 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,40,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.72 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்து, மேற்கு ஆசியாவில் போர் மேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கத்தால் தங்கம் மீதான முதலீடு குறைந்து, விலையும் சரிந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,200 (ரூ.100 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,600 (ரூ.800 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,400 (ரூ.109 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,200 (ரூ.872 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,200 (ரூ.100 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,600 (ரூ.800 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,400 (ரூ.109 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,200 (ரூ.872 குறைவு)
Edited by Induja Raghunathan

