Gold Rate Chennai: ஆரம்பமே அட்டகாசம் - தங்கம் விலை ரூ.1,120 சரிவு!
ஆபரணத் தங்கம் விலை கடந்த வாரத்தில் ரூ.4,000-க்கும் மேலாக உயர்ந்த நிலையில் இன்று ரூ.1,120 குறைந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.09 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10,000 குறைந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை வெகுவாக சரிந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு சற்று மகிழ்ச்சி அளித்துள்ளது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,700 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,09,600 ஆகவும் மாற்றமின்றி இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.14,945 ஆகவும், சவரன் விலை ரூ.1,19,560 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை கடந்த வாரத்தில் ரூ.4,000-க்கும் மேலாக உயர்ந்த நிலையில் இன்று ரூ.1,120 குறைந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.09 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10,000 குறைந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (6.7.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.140 குறைந்து ரூ.13,560 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.152 குறைந்து ரூ.14,793 ஆகவும், சவரன் விலை ரூ.1,216 குறைந்து ரூ.1,18,344 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (6.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.10 குறைந்து ரூ.250 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 குறைந்து ரூ.2,50,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.28 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா மோதல் பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,560 (ரூ.140 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,480 (ரூ.1,120 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,793 (ரூ.152 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,344 (ரூ.1,216 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,560 (ரூ.140 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,480 (ரூ.1,120 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,793 (ரூ.152 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,344 (ரூ.1,216 குறைவு)
Edited by Induja Raghunathan

