Gold Rate Chennai: தங்கம் விலை மேலும் ரூ.1,280 சரிவால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி!
ஆபரணத் தங்கம் விலை இரு தினங்களில் மட்டும் ரூ.2,400 அளவுக்கு குறைந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.08 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை வெகுவாக சரிந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கூடுதல் மகிழ்ச்சி அளித்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.140 குறைந்து ரூ.13,560 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.152 குறைந்து ரூ.14,793 ஆகவும், சவரன் விலை ரூ.1,216 குறைந்து ரூ.1,18,344 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இரு தினங்களில் மட்டும் ரூ.2,400 அளவுக்கு குறைந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.08 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (7.7.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.160 குறைந்து ரூ.13,400 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,280 குறைந்து ரூ.1,07,200 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.175 குறைந்து ரூ.14,618 ஆகவும், சவரன் விலை ரூ.1,400 குறைந்து ரூ.1,16,944 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (7.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.250 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,50,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.62 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா மோதல் பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,400 (ரூ.160 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,07.200 (ரூ.1,280 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,618 (ரூ.175 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,944 (ரூ.1,400 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,400 (ரூ.160 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,07.200 (ரூ.1,280 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,618 (ரூ.175 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,944 (ரூ.1,400 குறைவு)
Edited by Induja Raghunathan

