Gold Rate Chennai: தங்கம் விலை சற்றே சரிவு - இனி நிலவரம் எப்படி?
ஆபரணத் தங்கம் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.4,000-க்கும் மேலாக குறைந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.06 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.
நான்காவது நாளாக இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சற்றே குறைந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
சென்னையில் புதன்கிழமை தங்கம் விலை வெகுவாக குறைந்தது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,250 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,06,000 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.14,455 ஆகவும், சவரன் விலை ரூ.1,15,640 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.4,000-க்கும் மேலாக குறைந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.06 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (9.7.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 குறைந்து ரூ.13,220 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 குறைந்து ரூ.1,05,760 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 குறைந்து ரூ.14,422 ஆகவும், சவரன் விலை ரூ.264 குறைந்து ரூ.1,15,376 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (9.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.245 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,45,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.55 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்து, மேற்கு ஆசியாவில் போர் மேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது. இதனால், தங்கம் விலையில் இனி பெரிய அளவில் மாற்றம் வரலாம் என கணிக்கப்படுகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,220 (ரூ.30 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,760 (ரூ.240 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,422 (ரூ.33 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,376 (ரூ.240 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,220 (ரூ.30 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,760 (ரூ.240 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,422 (ரூ.33 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,376 (ரூ.240 குறைவு)
Edited by Induja Raghunathan

