Gold Rate Chennai: மகிழ்ச்சி செய்தி - மீண்டும் குறைந்த தங்கம் விலை ரூ.400 சரிவு!
சவரன் விலை ரூ.400 சரிந்து, தங்கம் விலை மீண்டும் இறங்கு முகம் கண்டுள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.07 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கம் விலை நேற்று சற்றே உயர்ந்த நிலையில், இன்று ஓரளவு சரிந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.13,350 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.1,06,800 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.14,564 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.1,16,512 ஆகவும் விற்பனை ஆனது.
சவரன் விலை ரூ.400 சரிந்து, தங்கம் விலை மீண்டும் இறங்கு முகம் கண்டுள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.07 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (11.7.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 குறைந்து ரூ.13,300 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.1,06,400 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து ரூ.14,509 ஆகவும், சவரன் விலை ரூ.440 குறைந்து ரூ.1,16,072 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (11.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.240 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.53 ஆக உள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்து, மேற்கு ஆசியாவில் போர் மேகம் வலுக்கத் தொடங்கிய நிலையில், மீண்டும் அமைதிப் பேச்சு தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதன் தாக்கத்தால் தங்கம் மீதான முதலீடு குறைந்து, விலையும் சரிந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,300 (ரூ.50 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,400 (ரூ.400 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,509 (ரூ.50 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,072 (ரூ.440 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,300 (ரூ.50 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,400 (ரூ.400 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,509 (ரூ.50 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,072 (ரூ.440 குறைவு)
Edited by Induja Raghunathan

